இந்தியாவில் மெருகு குலையாது காட்சியளிக்கும் கோட்டைகளில் இந்த உத்கீர் கோட்டையும் ஒன்று. புகைப்பட ஆர்வலர்கள் ஒரு நாள் முழுவதையும் இங்கு கழித்து புகைப்படங்கள் எடுக்கலாம்.
1700ம் ஆண்டுகளில் மராத்தாக்களும் நிஜாம் ராஜ வம்சத்தினரும் இந்த கோட்டையில்தான் உடன்படிக்கையை ஏற்படுத்திக்கொண்டனர். நன்கு பராமரிக்கப்பட்டு காட்சியளிக்கும் இந்த கோட்டையை சுற்றி ஆழமான அகழி அமைந்திருக்கிறது.
அறுபது அடி ஆழத்தில் தரை மட்டத்திற்கு கீழே கட்டப்பட்டிருக்கும் அரியணை அறை இதன் சிறப்பம்சமாகும். சில அரிய பெர்ஷிய மற்றும் அரபிக் கல்வெட்டுக்குறிப்புகளையும் இங்கு பார்க்கலாம்.



Click it and Unblock the Notifications