Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » லாங்லெங் » வானிலை

லாங்லெங் வானிலை

பொதுவாகவே நாகாலாந்துக்கு சுற்றுலா செல்பவர்கள் மழை இல்லாத காலத்தில் செல்வது சிறந்தது. லாங்லெங்கிற்கும் இது பொருந்தும். அக்டோபர் முதல் மே மாதம் வரை சுற்றுலாப் பயணிகள் சென்று வர சிறப்பான காலம். சுற்றுலா செல்ல திட்டம் செய்யும்போதே இவ்வனைத்தையும் கருத்தில் கொண்டு, அப்படியே மோன்யூ திருவிழாவையும் கண்டுகளிக்கும் வகையில் பயணத்தை அமைத்துக் கொள்வது சிறப்பு.

கோடைகாலம்

லாங்லெங்கில், வெயில்காலத்தில், 22 முதல் 27 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகும். இது அனைவருக்கும் மிகவும் இனிமையான கோடை காலமாக இருக்கும். இரண்டு மாதம் மட்டுமே நீடிக்கும் வெயில் காலத்துக்கு பின் மழைகாலம் தொடங்கிவிடுகிறது. இருப்பினும், ஜூலை மாதம் வரை வெப்பம் காணப்படுகிறது.

மழைக்காலம்

மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை லாங்லெங்கில் மழைக்காலம். வருடத்தின் பல மாதங்களுக்கு மழை பொழிவதால், வெப்பம் சற்று குறைவாகவே உணரப்படும். பகலில் வெதுவெதுப்பாகவும் இரவில் கொஞ்சம் குளிருடனும் இருக்கும். லாங்லெங்கில் சராசரியாக 20 முதல் 30 செமீ வரை மழை பொழிகிறது.

குளிர்காலம்

அக்டோபர் இறுதியில் இருந்து மார்ச் வரை லாங்லெங்கில் குளிர்காலம். ஜனவரி மாதத்தில் குளிர் மிகவும் அதிகமாக இருக்கும். இரவில் 1 டிகிரி செல்சியஸ் அளவிற்கு கூட செல்லும்.