Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மதுரை » வானிலை

மதுரை வானிலை

மதுரை பகுதியை சுற்றிப்பார்த்து ரசிக்க விரும்பும் பயணிகள் அக்டோபர் முதல் மார்ச் வரையிலான பருவத்தில் விஜயம் செய்வது சிறந்தது. இம்மாதங்களில் மட்டுமே சுற்றுலாவுக்கேற்ற சாதகமான சூழல் இப்பகுதியில் நிலவுகிறது. மற்ற காலங்களில் வறண்ட வெப்பமான சூழலே காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

கோடைகாலம்

(மார்ச் முதல் ஜூன் வரை) : மதுரைப்பகுதியில் கோடைக்காலத்தில் கடும் உஷ்ணம் நிலவுகிறது. குறைந்தபட்சமாக 26°C முதல் அதிகபட்சமாக 41°C வரை இக்காலத்தில் வெப்பநிலை நிலவுகிறது. குறிப்பாக மே மாதத்தில் வெப்பநிலை அதிகமாக இருக்கும். எனவே கோடைக்காலம் மதுரை நகரை சுற்றிப்பார்த்து மகிழ ஏற்றதாக இல்லை.

மழைக்காலம்

( ஜூலை முதல் ஆகஸ்ட் வரை) : மதுரை பகுதியில் ஜூலை முதல் ஆகஸ்ட் வரை மிதமானது முதல் கடுமையானது வரையான மழைக்காலம் நீடிக்கிறது. இக்காலத்தில் வெப்பநிலை  தனிந்து  காணப்படுகிறது. மழையின் அசௌகரியங்களை பெரிதாக பொருட்படுத்தாத மனோநிலை இருப்பின் பயணிகள் மழைக்காலத்தில் மதுரைக்கு சுற்றுலா மேற்கொள்ளலாம்.

குளிர்காலம்

( டிசம்பர் முதல் பிப்ரவரி வரை) : மதுரை  பகுதியில் டிசம்பர் மாதம் துவங்கும் குளிர்காலம் பிப்ரவரி வரை நீடிக்கிறது. இக்காலத்தில் குறைந்தபட்சமாக 18°C முதல் அதிகமாக 32°C வரை இங்கு வெப்பநிலை நிலவுகிறது.  இதமான சூழல் நிலவுவதால் இப்பருவம் சுற்றுலாவுக்கு ஏற்றதாக உள்ளது.