Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மஹாபலிபுரம் » வானிலை

மஹாபலிபுரம் வானிலை

நவம்பர் முதல் பிப்ரவரி வரையான பருவமே மாமல்லபுரம் நகருக்கு விஜயம் செய்ய ஏற்றதாக உள்ளது. இக்காலத்தில் சுற்றுச்சூழல் இதமாக காணப்படுவதால் நிதானமாக ஒரு நாள் முழுதையும் செலவிட்டு கோயில்கள் மற்றும் கடற்கரை பகுதியை பார்த்து ரசிக்கலாம்.

கோடைகாலம்

கோடைக்காலத்தில் மாமல்லபுரம் பகுதியில் அதிக உஷ்ணம் நிலவுகிறது. இக்காலத்தில் சராசரி வெப்பநிலை 21°C முதல் 42°C வரை இருக்கும். அருகிலேயே கடல் இருப்பதால் மாலை நேரத்தில் ஓரளவு வெப்பம் தணிந்தும் காணப்படும். இருப்பினும் கோடைக்காலத்தில் மாமல்லபுரத்தில் அதிகம் வெளியில் சுற்றுவது அசௌகரியமாகவே இருக்கக்கூடும்.

மழைக்காலம்

மழைக்காலத்தில் மாமல்லபுரத்தில் அதிக ஈரப்பதம் நிலவுகிறது. இக்காலத்தில் வெப்பநிலை 25°C அளவில் இருக்கும். மழைப்பொழிவு குறித்த உறுதியாக சொல்ல முடியா விட்டாலும் தாழ்வழுத்தம் ஏற்பட்டிருக்கும் பட்சத்தில் பயணிகள் கடும் மழைக்கான முன் தயாரிப்புகளுடன் செல்வது நல்லது.

குளிர்காலம்

குளிர்காலத்தில் மாமல்லபுரம் பகுதி இனிமையான இதமான சூழலுடன் காட்சியளிக்கின்றது. இக்காலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 16°அளவில் காணப்படுகிறது. எனவே மாமல்லபுரத்தின் கலைச்சின்னங்களை நன்கு சுற்றிப்பார்த்து ரசிக்க இப்பருவம் மிகவும் ஏற்றதாக உள்ளது.