அடர்ந்த வனப்பகுதியின் உள்ளே அமைந்திருக்கும் கல்லாரி எனும் கிராமத்தில் இந்த கல்லாரிமாதா கோயில் வீற்றிருக்கிறது. நவராத்திரி திருநாளில் இந்த தெய்வத்தை வழிபடுவதற்காக ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். சித்திரா பவுர்ணமியின்போது திருவிழா ஒன்றும் இங்கு கோலாகலமாக நடத்தப்படுகிறது.
புராணக்கதைகளின்படி, மஹாபாரத யுகத்தில் பாண்டவர்கள் இந்த வனப்பகுதிக்கு விஜயம் செய்ததாக சொல்லப்படுகிறது. இங்குள்ள மலைகளில் பீமனின் பாதச்சுவடுகள் தெரிவதாகவும் நம்பிக்கை நிலவுகிறது.



Click it and Unblock the Notifications