Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மஹொபா » வானிலை

மஹொபா வானிலை

இது மிதவெப்ப மண்டல வெப்பநிலை மண்டலத்தில் உள்ளது. எனவே இங்கு மிகக் கடுமையான கோடை மற்றும் குளிர் காலம் நிலவுகிறது. இரண்டிற்கு நடுவில் பருவமழைக் காலம் வருகிறது.  

கோடைகாலம்

மஹொபாவின் கோடைகாலம் மார்ச்சில் தொடங்கி மே வரை நீடிக்கும். சில சமயங்களில் இது ஜூன் வரை  நீடிக்கிறது. மே மாதமே மஹொபாவின்  வெப்பமான மாதம் ஆகும். இங்கு கோடைகாலத்தின் அதிக மற்றும் குறைந்த பட்ச வெப்பநிலை முறையே 40 ° C மற்றும்,  25 ° C ஆகும். 

மழைக்காலம்

இங்கு ஜூலை மாதத்தில் தொடங்கும் பருவமழை செப்டம்பர் வரை நீடிக்கிறது. இந்த நகரம் ஆகஸ்ட் மாதத்தில் அதிகபட்ச மழையை பெறுகிறது. இந்த காலத்தில் வானிலை ஈரப்பதத்துடன் காணப்படும். அப்பொழுது வானம்  மேகங்கள் சூழ்ந்து கடும் மழைப் பொழிவை  கொண்டு  வரும்.

குளிர்காலம்

இங்கு குளிர்காலம் நவம்பர் மாதத்தில் தொடங்கி பிப்ரவரி வரை நீடிக்கிறது. குளிர்காலத்தில் இங்கு லேசான மற்றும் இனிமையான வானிலை நிலவுகிறது. குளிர்காலத்தில் இங்கு நிழவும் அதிகபட்ச மற்றும் குறைந்த பட்ச வெப்பநிலை முறையே 9 ° C  மற்றும் 25 ° C ஆகும்.