Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மலப்புரம் » வானிலை

மலப்புரம் வானிலை

மலப்புரம் மாவட்டத்தில் உள்ள நகரங்களை செப்டம்பரிலிருந்து, பிப்ரவரி வரையிலான காலங்களில் சுற்றிப் பார்க்கும் அனுபவம் மிகவும் சிறப்பானதாக இருக்கும்.

கோடைகாலம்

(மார்ச் முதல் மே வரை) : மலப்புரம் மாவட்டத்தில் கோடை காலங்கள் சற்று கடுமையானதாகவே இருக்கும். எனவே நீங்கள் கோடை காலத்தில் மலப்புரம் நகரங்களை சுற்றிப் பார்க்கும் போது காட்டன் உடைகளை அணிந்திருப்பது நல்லது.

மழைக்காலம்

(ஜூன் முதல் செப்டம்பர் வரை) : மலப்புரம் மாவாட்டத்தில் தென்மேற்கு பருவக்காற்றின் காரணமாக ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் கடும் மழை கொட்டித் தீர்க்கும். எனவே மலப்புரம் நகரங்களுக்கு நீங்கள் மழைக் காலங்களில் சுற்றுலா வருவதை தவிர்ப்பது நல்லது.

குளிர்காலம்

(ஜனவரி முதல் பிப்ரவரி வரை) : கேரளாவின் மற்ற பகுதிகளை போல மலப்புரம் மாவட்டத்தின் பனிக் காலங்களும் இதமான வெப்பநிலையையே கொண்டிருக்கும். எனவே நீங்கள் மலப்புரம் நகரங்களை பனிக் காலங்களில் சுற்றிப் பார்க்கும் அனுபவம் சிறப்பானதாக இருக்கும்.