ஹரிஷ்சந்திரகாட், மால்ஷேஜ் காட்

மால்ஷேஜ் காட் ஸ்தலத்தின் ஒரு முக்கியமான வரலாற்று சின்னமான இந்த ஹரிஷ்சந்திரகாட் கோட்டை 6ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். 1424 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த கோட்டைப்பகுதி சாகசப்பயணிகள் விரும்பும் மலையேற்றத்துக்கான ஒரு அற்புதமான வாய்ப்பை தருகிறது.

இந்த அற்புதமான கோட்டையை நோக்கி மேலே ஏறும் பயணமானது சாகச ‘த்ரில்’ விரும்பிகளுக்கும் இயற்கை ஆர்வலர்களுக்கு மிகவும் பிடித்தமாக இருக்கும்.

அருகிலுள்ள ஹரிஷ்சந்திரகாட் சிகரமும் முக்கியமான பார்க்க வேண்டிய அம்சமாக உள்ளது. இந்த சிகரப்பகுதியிலிருந்து ஒரு நாணயத்தை நீங்கள் கீழ் நோக்கி விசி எறிந்தால் அது புவியீர்ப்பு சக்தியை மீறி மேல் நோக்கி தள்ளப்பட்டு மிதந்து செல்லும் அதிசயத்தை பார்க்கலாம்.

இங்குள்ள புவியியல் அம்சங்களே இப்படி ஒரு அற்புதத்தை நிகழ்த்துகின்றன. அதாவது அரை வட்டப்பாறை அமைப்பும் கீழ் உள்ள பள்ளத்தாக்கில் நிலவும் அதிகபட்ச காற்றழுத்தச்சூழலும் இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.

இந்த ஹரிஷ்சந்திரகாட் கோட்டை கலாசூரி வம்சத்தினரால் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த கோட்டை வளாகத்தில் ஒரு அழகிய விஷ்ணு கோயிலும் அமைந்துள்ளது. அருகாமையிலேயே சில புராதன புத்த குகைக்கோயில்களும் உள்ளன.

Please Wait while comments are loading...