மண்டுவிற்கு அருகில் இருக்கும் ஒன்பது குகைகள் தான் பாக் குகைகள் என்ற பெயரில் பௌத்த மடாலயங்களாக இருந்தன. இந்த குகைகளின் உட்புற சுவர்களில் இருக்கும் அழகிய அலங்கார வேலைப்பாடுகள் இந்த குகைகளை கண்டிப்பாக காண வேண்டிய இடமாக வைத்திருக்கின்றன.
இந்த குகைகள் இருந்த காலம் சரியாக கணிக்கப்படவில்லை. எனினும் கி.பி. 400 முதல் கி.பி. 700-ம் ஆண்டுகள் வரையிலும் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இந்த குகைகளில் காணப்படும் ஓவியங்கள் காலத்தைக் கடந்து அழியாமல் நின்றதோடு மட்டுமல்லாமல், இயற்கையின் புண்ணியத்தால் மேலும் அழகு படுததப்பட்டிருக்கின்றன என்பதுதான் உண்மை.
உண்மையில் இந்த மடாலயங்கள் 'குகை' என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தாலும், இந்த குகைகள் இயற்கையாக உருவானவை அல்ல. இவை விந்திய மலைகளைக் குடைந்து மனிதர்களால் அரைக்கோள வடிவத்தில் உருவாக்கப்பட்ட பாறைக்குடைவு மனித-வாழிடங்களாகும். இந்த குகைகள் அஜந்தா குகைகளைப் போலவே வடிவமைக்கப்பட்டுள்ளன.
எல்லா குகைகளுமே நான்காகப் பிரிக்கப்பட்ட அறைகளையும், அவை முடியும் இடத்தில் பிரார்த்தனைக் கூடமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்த சிறிய அறைகளும் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான ஓவியங்களை தன்னகத்தே கொண்டிருக்கும் இந்த குகைகளை காண வருவது வரலாற்றைப் புரிந்து கொள்ள உதவும் பயனுள்ள அனுபவமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications