Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மண்டு » ஈர்க்கும் இடங்கள் » பாஸ் பகதூர் அரண்மனை

பாஸ் பகதூர் அரண்மனை, மண்டு

49

மிகப்பெரிய அரச சபைக்கூடங்கள், பெரிய அளவிலான மத்திய கூடங்கள் மற்றும் சமதளப் பரப்புகளுடன் உங்களைத் திணற வைக்கும் வகையில் 16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பாஸ் பகதூர் அரண்மனை, உலகம் முழுவதுமுள்ள சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் அற்புதமான இடமாகும்.

மண்டுவில் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் இடங்களில் ஒன்றாக இருக்கும் பாஸ் பகதூர் அரண்மனையிலிருந்து பார்த்தால் ரூப்மதி பெவிலியன் தெரியும்.

மதம் மற்றும் உலக பிணைப்புகளை கடந்து நின்று கொண்டுள்ள ரூப்மதி மற்றும் பாஸ் பகதூரின் காதல் கதையின் பிற்பகுதியை எடுத்துச் சொல்லும் இடமாக இந்த அரண்மனை உள்ளது.

இந்த அரண்மனையின் சுவர்கள் காலத்தின், இயற்கையின் தாக்குதலுக்கு ஆளாகியிருப்பினும், இதன் நீண்ட பிரகாரங்களில் எண்ணற்ற தூண்கள் மற்றும் வளைவுகளுக்கு இடையில் நடந்து செல்வதன் மூலம் இந்த அரண்மனையின் பொலிவு மிக்க பழம் பெருமையை நம்மால் அறிந்திட முடியும்.

இங்கிருக்கும் தோட்டங்கள் அற்புதமான காட்சிகளை வழங்கும் அமைதியான இடங்களாகும். 1509-ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த மாளிகையில் தான் 1555 முதல் 1561-ம் ஆண்டுகளில் பாஸ் பகதூரின் அரசவைகள் இயங்கி வந்தன.

இந்த அரண்மனை கலை மற்றும் கட்டிடக்கலைக்கு அற்புதமான சான்றாக காலத்தைக் கடந்து நின்று கொண்டிருக்கும் இடமாகும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Aug,Wed
Return On
20 Aug,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Aug,Wed
Check Out
20 Aug,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Aug,Wed
Return On
20 Aug,Thu

Near by City