சப்பான் மஹால் அருங்காட்சியகத்தில் பழங்குடியினரின் கலை மற்றும் கைவினைப் பொருட்கள் மற்றும் தொல்பொருட்கள் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன.
மண்டுவின் சமீபத்திய வரவான இந்த அருங்காட்சியகத்தில் நவீன தொழில்நுட்பங்களைச் சேர்ந்த ஒலி மற்றும் ஒளி அமைப்புகள், ஒளிக்கருவிகள் ஆகியவை ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன.
மாநில தொல்பொருள் துறை இந்த அருங்காட்சியகத்தின் வடிவமைப்புகளைப் பற்றி விவாதித்து விட்டு, பல்வேறு கலைப்பொருட்களை இங்கே காட்சிக்கு வைத்துள்ளது. ஒவ்வொரு கலைப்பொருளுக்கும் உரிய தகவல்களும் இங்கு வைக்கப்பட்டிருப்பதால் நீங்கள் இங்கு வருவது பயனுள்ள அனுபவமாகவே இருக்கும்.
மாநில தொல்பொருள் துறையினரால் பராமரிக்கப்படுவதால் இந்த தகவல்களின் நம்பகத்தன்மையில் கேள்வி எழுவதற்கு வாய்ப்புகள் இல்லை.
தார் மாவட்ட நிர்வாகமும், சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கும் பொருட்டாக ஒரு துணை மின்-நிலையம், ஆஷ்மாதா, ருபயான் ஷோரூம், ஸ்பார்தா பொழுதுபோக்கு மையம், வழிகாட்டிப் பலகைகள், இளைஞர் விடுதிகள் ஆகிய பல்வேறு திட்டங்களையும், வசதிகளையும் செய்து வருகிறது.இந்த வகையில் தொடங்கப்பட்ட திட்டம் தான் சப்பான் மஹால் அருங்காட்சியகமாகும்.



Click it and Unblock the Notifications