சாகர் தலாவோ ஏரியின் கரையில் உள்ள சில நினைவுச் சின்னங்களில் தாய் கி சோட்டி பெஹென் கா மஹாலும் ஒன்றாகும். இந்த நினைவுச்சின்னம் ஒரு மாற்றுத் தாய் செவிலியரின் (Wet Nurses) சகோதரிக்கான நினைவிடமாகும்.
இந்தியாவின் உயர் வர்க்கப் பிரிவினரிடையே இந்த மாற்றுத் தாய் செவிலியர்கள் முக்கியமான வேலைகளை செய்து வந்தார்கள். மாற்றுத் தாய் செவிலியர்கள் பிறருடைய குழந்தைகளுக்கு தங்கள் மார்பிலிருந்து தாய்ப்பால் கொடுப்பவர்களாவார்கள்.
பல்வேறு காரணங்களுக்காக முந்தைய கால இராஜ குடும்பங்களில் இவர்கள் பெருமளவில் பணிபுரிந்து வந்தார்கள். எனவே அவர்கள் குறிப்பிடத்தக்க அளவு முக்கியமானவர்களாகவும், அதிகாரமுடையவர்களாகவும் இருந்து வந்தனர்.
அவர்கள் எந்த அளவிற்கு இராஜ குடும்ப வாரிசுகளை செழிப்பாகவும், பாதுகாப்பாகவும் வளர்த்து வருகிறார்களோ அந்த அளவிற்கு அவர்களுடைய நிலையும் உயர்வாக இருக்கும்.
இந்த செவிலித்தாய் மற்றும் அவருடைய சகோதரிக்காக இந்நினைவுச் சின்னம் கட்டப்பட்டுள்ளது என்பதே இந்த மாற்றுத் தாய் செவிலியர்கள் இருந்து வந்த முக்கியமான நிலையைக் காட்டுவதாக இருக்கின்றன.
தாய் கி சோட்டி பெஹென் கா மஹால் என்ற வார்த்தைகளுக்கு 'மாற்றுத் தாய் செவிலிரின் சகோதரிக்கான அரண்மனை' என்று பொருளாகும்.



Click it and Unblock the Notifications