மண்டுவில் இருக்கும் முக்கியமான தொல்பொருள் ஆய்விடமாக தர்யா கானின் கல்லறை உள்ளது. கலைநயமும், வேலைப்பாடுகளும் நிறைந்த சிற்பங்களை நினைவில் நிறுத்தும் நினைவுச்சின்னங்களாக கொண்ட இந்த கல்லறைக்கு வருவது, வேறொரு நூற்றூண்டிற்கே உங்களை அழைத்துச் சென்று விடும்.
தர்யா கான் இறுதியாக ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் இடமாக இந்த கல்லறை கருதப்படுகிறது. ஹோசாய் கிராமம் மற்றும் ரேவா குந்த் ஆகிய இடங்களுக்கு அருகில் உள்ள இந்த கல்லறையைச் சுற்றிலும், பல்வேறு சுற்றுலா பார்வையிடங்கள் உள்ளதால், இது சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் ஏற்ற பார்வையிடமாக உள்ளது.
தாஜ் மகாலைப் போன்ற பிரதி கட்டிடம் மற்றும் நான்கு குவி மாடங்களை கொண்ட ஹோசாங் ஷாவின் கல்லறை ஆகியவை இந்த கல்லறையின் எல்லைகளில் உள்ளன.
உயரப்படுத்தப் பட்டுள்ள மேட்டு நிலத்தில், சதுர வடிவத்தில், நான்கு பக்கங்களிலும் உயரமான வளைவுகளுடன் இந்த கல்லறை அமைக்கப்பட்டுள்ளது. தெளிவாக இருக்கும் உள்பகுதியின் சுவர்களில் நீல நிற டைல்ஸ்கள் பதிக்கப்பட்டு இந்த வளைவுகள் வண்ணமூட்டப் பட்டிருக்கின்றன.
கற்களுக்கிடையே குறுக்கும் நெடுக்குமாக கம்பிகளால் உருவாக்கப் பட்டுள்ள வேலைப்பாடுகளால் வெளிச்சமும் காற்றும் இவ்விடத்திற்குள் தங்கு தடையின்றி வரச் செய்திருப்பது, அந்த காலகட்டத்தின் கலை மற்றும் தொல்பொருள் பாதுகாப்பு அம்சங்களை நமக்கு தெளிவாக எடுத்துரைக்கின்றன.



Click it and Unblock the Notifications