மண்டுவில் உள்ள வரலாற்றுப் புகழ் பெற்ற கட்டிடங்கள், கோவில்கள் ஆகியவற்றிலிருந்தும் மிகவும் மாறுபட்ட பதிவுகள் மற்றும் சிற்பங்களை கொண்டிருக்கும் இடங்களாக லோஹானி குகைள் மற்றும் கோவில்கள் உள்ளன.
இவை பாறைகளில் செதுக்கப்பட்ட சிறு சிறு அறைகளின் தொகுப்புகள் தான் லோஹானி குகைகளாகும். ஆரம்பத்தில் சைவ துறவிகளின் இருப்பிடமாக இந்த குகைகள் இருந்து வந்தன.
இந்த கோவிலின் நுழைவாயிலாகவும், நீராதாரமாகவும் பாறைகளைக் குடைந்து செதுக்கப்பட்டுள்ள ஒரு நீர்த்தேக்க தொட்டி உள்ளது. லோஹானி குகைளுக்கு சற்றே குழப்பமான வரலாறுதான் மிஞ்சியுள்ளது.
இந்த குகைகளில் துறவிகள் மட்டுமே வசித்து வந்ததாக சிலரும், சில பேர் இந்த குகைளிலிலிருந்து மத முக்கியத்துவம் வாய்ந்த சிலைகள் கண்டெடுக்கப்பட்டதால் இவை மத முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் என்வும் குறிப்பிட்டு சொல்கின்றனர்.
இந்த சிலைகள் தற்போது ஹோசாங் ஷாவின் கல்லறை பகுதியிலுள்ள தர்மசாலா அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டுள்ளன. இந்த குகைகளில் இருந்த கோவிலின் பகுதிகள் வெட்டியெடுக்கப்பட்டு, மண்டு நகரத்திலிருக்கும் இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்களை கட்டுவதற்காக, கொண்டு செல்லப்பட்டதாக நம்பப்படுகின்றன.



Click it and Unblock the Notifications