பாஸ் பகதூர் மற்றும் ரூப்மதியின் காதல் கதைக்காக உருவாக்கப் பட்ட மற்றுமொரு நினைவுச் சின்னம் தான் ரேவா குந்த் ஆகும். ரூப்மதி பெவிலியனுக்கு தண்ணீர் விநியோகம் செய்யும் பொருட்டாக பாஸ் பகதூர் உருவாக்கிய செயற்கை ஏரிதான் ரேவா குந்த்! இந்த ஏரி மத சார்புடையதாக இருப்பது இதன் மற்றுமொரு பெருமையாகும்.
இந்த பகுதியில் உள்ள மற்ற ஏரிகளைப் போல, இன்றும் புறக்கணிக்கப்படாமல் இந்த ஏரியைப் பாதுகாத்து வைத்திருக்கும் பெருமை மத நம்பிக்கையுடைய இந்துக்களையே சேரும்.
இந்த ஏரியைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலப்போக்கில் கட்டிடங்கள் பலவும் எழுப்பப்பட்டுள்ளன. இந்த ஏரியின் தென்-மேற்கு பகுதியில் காலப்போக்கில் விஸ்தரிக்கப்பட்டுள்ள, பல்வேறு வகையான தூண்கள் மற்றும் வளைவுகளை கொண்டுள்ள பெவிலியன் பகுதி இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் புனிதப் பயணிகளின் ஓய்விடமாக உள்ளது.
இந்த ஏரியின் வடக்கு எல்லையில் பாஸ் பகதூர் மாளிகைக்கு தண்ணீர் சப்ளை செய்யும் தண்ணீர் தூக்கி ஒன்றும் உள்ளது. மண்டுவிற்கு சுற்றுலா வரும் போது ரேவா குந்த் வருவதும் உங்களுடைய பயண திட்டத்தில் இருக்கட்டும்.



Click it and Unblock the Notifications