மண்டு நகரத்தின் மதில்களுக்குள் உள்ள இடம் தான் ஸ்ரீ மன்டவ்கார் தீர்;த்தம். இன்றளவும் இந்நகரத்தில் அழியாமல் இருக்கும் இந்து மத பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாகவே இந்த தீர்த்தம் அமைந்துள்ளது.
மண்டு மற்றும் 'மகிழ்ச்சியான நகரம்' என்றும் மன்டவ்கார் பல்வேறு காலகட்டங்களில் அழைக்கப்பட்டு வந்திருக்கிறது. இப்பெயர்களுக்கெல்லாம் மேலாக, இந்நகரத்தின் சுவர்களுக்குள் உள்ள பெருமைக்குரிய இடமாக மன்டவ்கார் உள்ளது.
மண்டுவின் பெருமை மற்றும் பாரம்பரியத்தை மேலும் அதிகரிக்கும் இடமாகவே ஸ்ரீ மன்டவ்கார் தீர்த்தம் உள்ளது. தனித்தன்மை வாய்ந்த இந்த கோவிலின் கர்ப்பகிரகத்திற்குள் இருக்கும் வெண்மையான சிலையைப் பார்ப்பதற்காகவே பக்தர்களும் அதிகளவில் வந்து செல்வார்கள்.
பத்மாசன நிலையில் அமர்ந்திருக்கும் இவர் ஸ்ரீ சுபர்ஸ்வாநாத் பகவான் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். இங்கு வருவபர்கள் பல்வேறு நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் பாரம்பரியத்தையும், சிறப்பான பாரமரிப்பையும் உணர முடியும்.
அருகிலிருக்கும் போஜன்சாலா மற்றும் தர்மசாலாவுடன் சேர்த்து இந்த கோவிலையும் ஸ்ரீ ஜெயின் ஸ்வேதாம்பர் தீர்த்த பீடம் பராமரித்து வருகிறது.



Click it and Unblock the Notifications