Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மந்த்ராலயம் » வானிலை

மந்த்ராலயம் வானிலை

மந்த்ராலயம் நகரை அக்டோபர் மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கு இடைப்பட்ட காலங்களில் சுற்றிப் பார்க்கும் அனுபவம் மிகச் சிறப்பானதாக இருக்கும்.

கோடைகாலம்

(மார்ச் முதல் ஜூன் வரை) : மந்த்ராலயம் நகரின் கோடை காலங்களில் 42 டிகிரிக்கும் அதிகமாக வெப்பநிலை நிலவும். எனவே சுட்டெரிக்கும் இந்த கோடை காலங்களில் மந்த்ராலயம் நகருக்கு சுற்றுலா வருவதை பயணிகள் தவிர்ப்பது நல்லது.

மழைக்காலம்

(ஜூலை முதல் செப்டம்பர் வரை) : மந்த்ராலயம் நகரின் மழைக் காலங்களில் மழையின் காரணத்தால் வெப்பநிலையில் மாற்றம் ஏற்பட்டாலும் 32 டிகிரிக்கு குறைவாக வெப்பநிலை இறங்காது. இந்தக் காலங்களில் மந்த்ராலயம் நகரில் மிதமான மழைப் பொழிவு இருப்பதோடு, ஈரப்பதம் அதிகமாக காணப்படும்.

குளிர்காலம்

(நவம்பர் முதல் பிப்ரவரி வரை) :  மந்த்ராலயம் நகரின் பனிக் காலங்களில் 25 டிகிரிக்கு குறைவாக வெப்பநிலை செல்லாது. இந்தக் காலங்களில் குளிர்ச்சியை உணர முடியாவிட்டாலும், வெப்பத்தின் அளவு குறைவாகவே இருக்கும்.