Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மேடக் » வானிலை

மேடக் வானிலை

மேடக் நகரை அக்டோபர் மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கு இடைப்பட்ட காலங்களில் சுற்றிப் பார்க்கும் அனுபவம் மிகவும் சிறப்பானது.

கோடைகாலம்

(மார்ச் முதல் மே வரை) : மேடக் நகரின் கோடை காலங்களில் அதிகபட்சமாக 40 டிகிரியையும் தாண்டி வெப்பநிலை நிலவும். எனவே சுட்டெரிக்கும் இந்தக் கோடை காலங்களில் மேடக் நகருக்கு சுற்றுலா வருவதை பயணிகள் தவிர்ப்பது நல்லது.

மழைக்காலம்

(ஜூன் முதல் செப்டம்பர் வரை) : மேடக் நகரின் மழைக் காலங்களில் 30 டிகிரி அளவில் வெப்பநிலை நிலவும். இந்தக் காலங்களில் தென்மேற்கு பருவக் காற்றின் காரணமாக மிதமானது முதல் கன மழை வரை பெய்யக்கூடும்.

குளிர்காலம்

(நவம்பர் முதல் பிப்ரவரி வரை) : மேடக் நகரின் பனிக் காலங்களில் அதிகபட்சமாக 35 டிகிரியும், குறைந்தபட்சமாக 25 டிகிரியுமாக வெப்பநிலை பதிவாகும்.