Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மான் » வானிலை

மான் வானிலை

வானிலை முன்னறிவிப்பு
Mon, India 24 ℃ Partly cloudy
காற்று: 6 from the WSW ஈரப்பதம்: 65% அழுத்தம்: 1008 mb மேகமூட்டம்: 11%
5 அன்றைய தின வானிலை முன்னறிவிப்பு
நாள் அவுட்லுக் அதிகபட்சம் குறைந்தபட்சம்
Monday 06 May 14 ℃ 57 ℉ 28 ℃82 ℉
Tuesday 07 May 14 ℃ 57 ℉ 28 ℃83 ℉
Wednesday 08 May 18 ℃ 65 ℉ 28 ℃82 ℉
Thursday 09 May 19 ℃ 66 ℉ 28 ℃83 ℉
Friday 10 May 19 ℃ 67 ℉ 28 ℃82 ℉

மான் பகுதியில் எப்போதும் மிதமான வெப்பநிலையே நிலவுவதால், ஆண்டு முழுவதும் இந்த பகுதிக்குச் சென்று வரலாம். எனினும் கோடைகாலம் மற்றும் குளிர்காலத்தில் இந்த பகுதிக்குச் சுற்றுலாச் சென்று வருவது மிகவும் சிறப்பாக இருக்கும். குறிப்பாக கோடைகாலத்தில் கன்யாக் இன மக்கள் கொண்டாடும் எவோலியோன்க் மன்யு திருவிழா மிகவும் சிறப்பாக இருக்கும்.

கோடைகாலம்

கோடைகாலத்தில் மான் பகுதி மிக அருமையான இதமான வெப்பநிலையைக் கொண்டிருக்கும். ஆகவே மார்ச் முதல் மே மாதத்திற்குள் மான் பகுதிக்குச் சுற்றுலாச் செல்வது மிகவும் இனிமையாக இருக்கும். இந்த காலத்தில் இதன் சராசரி வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸாக இருக்கும். அதே நேரத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 16 டிகிரி செல்சியஸிற்கு குறையாமல் இருக்கும்.

மழைக்காலம்

மான் பகுதியில் மே மாதத்தின் இறுதியில் மழைக்காலம் ஆரம்பித்து அது அக்டோபர் மாதம் வரை இருக்கும். இந்த காலத்தில் அதிக அளவு மழை பெய்யும். அதுபோல் வெப்ப சலனமும் 76 சதவீதம் இருக்கும். மழைக்காலத்தில் இந்த மான் பகுதி பசுமை படர்ந்து காணப்படும்.

குளிர்காலம்

டிசம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை மான் பகுதியில் குளிர்காலம் நிலவுகிறது. இந்த காலத்தில் மான் பகுதியில் குளிர் அதிகமாக,  தட்பவெப்பம் 10 டிகிரி செல்சியசிற்கும் குறைவாக இருக்கும். குளிர்காலத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை இந்த பகுதியில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுவதால், இந்த காலத்தில் மான் பகுதி மிகச் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருக்கும். அதனால் பெருமளவு சுற்றுலாப் பயணிகள் குளிர்காலத்தில் மான் பகுதிக்கு வந்து செல்கின்றனர்.