Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மோரி » வானிலை

மோரி வானிலை

மோரியில் வருடம் முழுவதுமே சிறந்த சுற்றுலாவிற்கேற்ற மகிழ்ச்சியான பருவநிலை நிலவுவதால் வருடம் முழுவதும் வந்து செல்ல ஏற்ற இடமாக இது உள்ளது. எனினும், ராஃப்டிங் மற்றும் கயக்கிங் போன்ற விளையாட்டுகளை அனுபவிப்பதற்கு மிகவும் ஏற்ற பருவமாக மழைக்காலம் விளங்கி வருகிறது.

கோடைகாலம்

மோரியின் கோடைக்காலம் மார்ச் முதல் ஜுன் மாதங்களில் நிலவி வருகிறது. இந்நாட்களில் நிலவும் அதிகபட்ச மற்றும் குறைந்த பட்ச வெப்பநிலைகளாக முறையே 23˚C மற்றும் 9˚C உள்ளது. மலையேற்றம் மற்றும் பாறைகளில் ஏறுதல் போன்ற பல்வேறு வெளிப்புற விளையாட்டுகளை விளையாடுவதற்கு மிகவும் ஏற்ற பருவமாக இந்த பருவம் விளங்குகிறது.

மழைக்காலம்

ஜுலை மாதத்தில் மோரியில் தொடங்கும் மழைக்காலம் அக்டோபர் மாதம் வரையிலும் நீடித்திருக்கிறது. இந்நாட்களில் மோரியில் குறைந்த அளவே மழைப்பொழிவு இருக்கும். இந்நாட்களில் அடர்ந்த பசுமையான பச்சை நிறத்தால் இந்த பகுதி முழுவதும் அழகுபடுத்தப் பட்டிருக்கும்.

குளிர்காலம்

மோரியின் குளிர்காலம் நவம்பர் மாதம் தொடங்கி பிப்ரவரி மாதம் வரையிலும் நீடித்திருக்கும். இந்நாட்களில் நிலவும் அதிகபட்ச வெப்பநிலையாக 8˚C மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 2˚C ஆகியவை உள்ளன. குளிர்காலத்தின் உச்சத்தில் அதிகமான பனிப்பொழிவு நிகழும் இடமாக மோரி உள்ளது.