கன் ஹில் கடல் மட்டத்தில் இருந்து 2122மீ உயரத்தில் உள்ளது. முசூரியின் இரண்டாவது உயரமான மலை உச்சியான இவ்விடம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்திய சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில் உள்ளூர் மக்களுக்கு நேரம் தெரிவிக்கும் பொருட்டு மதிய வேளையில் இங்கு பீரங்கி வெடிக்கப்பட்டது. அந்த சத்தத்திற்கு ஏற்ப மக்கள் தங்கள் கடிகாரத்தை சரிப்படுத்திக் கொண்டார்கள். முசூரியின் தண்ணீர் தொட்டி கன் ஹில்லில் அமைந்துள்ளது.
இக்குன்றில் இருந்து இமலயமலைகளின் உச்சியையும், மால் எனப்படும் முசூரியின் புகழ்பெற்ற கடைவீதியின் அழகையும் ரசிக்கலாம். கன் ஹில்லை அடைய கயிற்றுப் பாதை எனப்படும் 'ரோப்வே ரைட்' இயக்கப்படுகிறது. மேலும் இயற்கை சூழலில் நடப்பதை விரும்பவர்கள் 'மால்' பகுதியில் இருந்து நடந்தே கன் ஹில் செல்லலாம்.



Click it and Unblock the Notifications