முசூரியின் மையப் பகுதியில் அமைந்திருக்கும் 'மால்' முசூரியின் புகழ்பெற்ற கடைவீதியாக விளங்குகிறது. காலனி காலத்து பலகைகளும், விளக்குத்தூண்களும் சாலையோரத்தில் அமைந்திருப்பது மேலும் அழகு சேர்ப்பதாக இருக்கிறது.
1980கள் காலத்தைய வீடியோ கேம் கடைகளும், ஸ்கேட்டிங் மைதானங்கலும், மெதடிஸ்ட் தேவாலயங்களும் இங்கு முக்கியமான இடங்களாக கருதப்படுகின்றன.
திபெத் பாரம்பரிய உடைகளை அணிந்த திபெத்தியர்கள் இங்கு கம்பளி, உலோக பாத்திரங்கள், மர சாமான்கள், சுவர் அலங்காரங்கள் மற்றும் பிற வெளிநாட்டு சாமான்கள் விற்பதைக் காணலாம். மேலும் கைத்தடிகள், நகைகள், கிண்ணங்கள், தாம்பூலங்கள், மூங்கில் கூடைகள் ஆகியவற்றையும் பயணிகள் வாங்கலாம்.



Click it and Unblock the Notifications