Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » நாகப்பட்டினம் » வானிலை

நாகப்பட்டினம் வானிலை

அக்டோபர் முதல், மார்ச் மாதங்களுக்கு இடைப்பட்ட காலமே , நாகப்பட்டினத்திற்கு சுற்றுலா செல்ல சிறந்த காலமாக இருப்பினும், ஆண்டின் அனைத்து மாதங்களிலும், பெருமளவு சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்தவண்ணம் உள்ளனர்.  ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் புனித யாத்திரைக்கு ஏற்ற மாதங்கள் ஆகும். மழைக்காலமான ஜூன் முதல், செப்டம்பர் மாதங்களில், சுற்றுலாத் தலங்கள், மிக அழகாகவும், புதியதாகவும் காட்சியளிக்கின்றன.  இக்காலங்களில் பல சுற்றுலாப் பயணிகள் இங்கு சிற்றுலா மேற்கொள்கின்றனர்.

கோடைகாலம்

மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை கோடை காலம் நீடிக்கிறது. இக்காலம் மிக வெப்பமாகவும், வறட்சியாகவும், உள்ளது. கோடையில் வெப்பநிலை 28℃ முதல் 38℃ வரை நிலவுகிறது. இருப்பினும் மாலை நேரத்தில் குளிர்ந்த கடல் காற்று வீசுவதால், குளிர்ச்சியாக இருக்கிறது.

மழைக்காலம்

ஜூன் முதல், செப்டம்பர் வரை குறைந்த அளவு மழை பெய்கிறது. இக்காலநிலையில், சுற்றுலா இடங்கள் புதியன போன்று பொலிவுடனும், மிக அழகாகவும், பூக்கள் பூத்தும், காய்கள் காய்த்தும், கனிகள் பழுத்தும், மனதிற்கு இதமாகக் காட்சியளிக்கின்றன.

குளிர்காலம்

டிசம்பர் முதல், பிப்ரவரி  வரை இங்கு குளிர்காலம் நிலவுகிறது. டிசம்பர் முதல் பிப்ரவரி  மாதங்களுக்கு இடைப்பட்ட காலமே, நாகப்பட்டினத்திற்கு சுற்றுலா செல்ல சிறந்த காலமாகக் கருதப்படுகிறது. இந்தக் காலங்களில் 20℃ முதல் 30℃ வரை வெப்பநிலை நிலவுகிறது.  நாகப்பட்டினத்தின் உச்சகட்ட சீசன் இக்காலத்தில்தான் காணப்படுகிறது.