மிக முக்கியமான சுற்றுலாத் தளமான ஓலக்குருவி நீர்வீழ்ச்சி நாகர்கோவிலில் இருந்து 20கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது. இயற்கைச் சூழலில் அமைந்திருக்கும் இந்நீர்வீழ்ச்சிக்கு கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் தவறாமல் வருகை தருகிறார்கள். தென்னிந்தியாவில் புகழ்பெற்ற நீர்வீழ்ச்சிகளில் இதுவும் ஒன்றாகும்.
உள்ளூர் நம்பிக்கைகளின்படி ஓலக்கருவி நீர்வீழ்ச்சி மருத்துவ குணங்கள் நிறைந்ததாகக் கருதப்படுகிறது. தோல்வியாதிகளையும், மூட்டு வலிகளையும் குணப்படுத்தும் தன்மை கொண்ட இந்நீர்வீழ்ச்சி, அதில் குளிக்கும் வயதானவர்கள் புத்துணர்ச்சி பெறவும், சக்தி பெறவும் உதவுகிறது.
நாகர்கோயில் நகரத்தில் இருந்தே நீர்வீழ்ச்சிக்கு சாலை வசதி இருக்கிறது. இருப்பினும் நீர்வீழ்ச்சிக்கு சற்று தொலைவிலேயே இந்த சாலை முடிவுறுகிறது. நீர்வீழ்ச்சியை அடைய சிறிது தொலைவு நடக்கவேண்டும்.
இந்த நடைபாதை சிறிது தொலைவே என்றாலும் நடைபாதையைச் சுற்றி இருக்கும் இயற்கை சூழல் காண்போரை மயங்கச் செய்யும் அழகுடன் விளங்குகிறது.



Click it and Unblock the Notifications