Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » நாகர்கோவில் » வானிலை

நாகர்கோவில் வானிலை

மிதமான தட்பவெட்ப நிலை நிலவும் அக்டோபர் முதல் ஃபிப்ரவரி வரையே நாகர்கோவிலுக்குப் பயணப்பட சிறந்த காலமாகும். கோடையின் உக்கிரமான வெயிலையும், மழைக்காலத்தின் கனமழையையும் தவிர்த்து ஊர் சுற்றிப் பார்க்க குளிர்காலத்தில் பயணப்படுவதே சிறந்ததாகக் கருதப்படுகிறது. குளிர்காலத்தில் இப்பகுதிக்கு வருவதையே சூற்றுலாப்பயணிகளும் விரும்புகிறார்கள். 

கோடைகாலம்

நாகர்கோவில் கடலுக்கு அருகில் இருப்பதால் அதன் புவியியல் அமைப்பின்படி மார்ச் முதல் மே இறுதிவரை கடுமையான வெயில் நிலவுகிறது. அதிகபட்சமாக 35 டிகிரி வரை வெயில் உக்கிரமடையும். உச்சகட்டமாக மதிய நேர வெயில் தாங்கமுடியாத வகையில் கடுமையாகவே இருக்கும்.

மழைக்காலம்

தகிக்கும் கோடைக்குப் பின் வரும் மழைக்காலம் நாகர்கோவிலின் சூட்டைத் தணிப்பதாக இருக்கிறது. மே மாதத்தின் இறுதியில் ஆரம்பித்து செப்டம்பர் இறுதி வரை தொடர்கிறது இடியுடன் கூடிய கனமழை. தட்வெட்ப நிலை 25டிகிரி வரை குறைந்தாலும் காற்றின் ஈரப்பதம் அதிகரித்தபடியே இருக்கிறது.

குளிர்காலம்

நவம்பர் மாத மத்தியில் ஆரம்பிக்கும் நாகர்கோவிலின் குளிர்காலம் இதமான குளிருடன் இருக்கிறது. பிப்ரவரி மத்தி வரை தொடரும் குளிர்காலத்தின் தட்பவெட்ப நிலை 20-22 டிகிரி வரை இருக்கிறது.  காற்றின் ஈரப்பதம் குறைவதால் காலை மற்றும் மதிய வேளைகளில் நகர் உலா செல்ல ஏதுவாக இருக்கிறது. மாலை மற்றும் இரவு வேலைகளில் குளிரை சமாளிக்க கம்பளித் துணிகள் தேவைப்படுகிறது.