முகப்பு » சேரும் இடங்கள் » நக்கர் » வானிலை

நக்கர் வானிலை

நக்கர் சுற்றுலாத்தலத்துக்கு பயணம் மேற்கொள்ள விரும்பும் பயணிகள் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையான பருவத்தில் பயணிப்பது நல்லது. கோடைக்காலம் மற்றும் மழைக்காலத்தை உள்ளடக்கிய இக்காலத்தில் இதமான இனிமையான சூழல் நிலவுகிறது.

கோடைகாலம்

(ஏப்ரல் முதல் ஜூலை வரை) : நக்கர் பகுதியில் ஏப்ரல் முதல் ஜூலை மாத இறுதி வரை கோடைக்காலம் நிலவுகிறது. இக்காலத்தில் அதிகபட்சமாக 20°C வெப்பநிலையும், குறைந்தபட்சமாக 5°C வெப்பநிலையும் நிலவுகிறது. மிதமான வெப்பநிலையை கொண்டுள்ளதால் கோடைக்காலத்தில் சுற்றுலாப்பயணிகளின் வரவு மிக அதிகமாக உள்ளது.

மழைக்காலம்

( ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரை) : உண்மையில் நக்கர் சுற்றுலாப்பிரதேசத்தில் மழைக்காலம் என்பதே கிடையாது என்று சொல்லும் அளவுக்கு இங்கு மழைப்பொழிவு மிக அரிதானதாக உள்ளது. ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரையான மழைக்காலத்தில் சிறிதளவு மழையையே இப்பகுதி பெறுகிறது. எனவே நக்கர் சுற்றுலாப்பிரதேசத்துக்கு விஜயம் செய்ய மழைக்காலமும் ஏற்றதாக உள்ளது.

குளிர்காலம்

(அக்டோபர் முதல் ஜனவரி வரை) : நக்கர் சுற்றுலாத்தலத்தில் அக்டோபர் மாதத்தில் துவங்கும் குளிர்காலம் ஜனவரி வரை நீடிக்கிறது. இக்காலத்தில் அதிகபட்சமாக 15°C வெப்பநிலையும், குறைந்தபட்சமாக 0°C வெப்பநிலையும் நிலவுகிறது.