தமிழ் நாட்டில் அமைந்திருக்கும் இந்த நாகூர் தர்க்கா உலகப்பிரசித்தி பெற்ற ஸ்தலமாக அறியப்படுகிறது. இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகெங்கிலும் உள்ள ஆன்மீகம் முக்கியத்துவம் வாய்ந்த மசூதிகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.
ஹஸ்ரத் சையத் ஷாஹுல் ஹமீத் காத்ரி இந்த தர்க்காவின் புகழுக்கு காரணமானவராக கருதப்படுகிறார். தஞ்சாவூருக்கு வெகு அருகிலேயே 78 கி.மீ தூரத்தில் இந்த நாகூர் தர்க்கா அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
தலைநகர் சென்னையிலிருந்து 7 மணி நேரப்பயணத்தில் இந்த நாகூருக்கு சென்று விடலாம். 500 வருடங்கள் பழமையானதாக கருதப்படும் இந்த மசூதி தெற்கத்திய கட்டிடக்கலை அம்சங்களுக்கான சான்றாக வீற்றிருக்கிறது.
இது இப்பகுதியிலுள்ள ஹிந்துக்கோயில்கள் போன்றே கட்டப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. 5 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்திருக்கும் இந்த தர்க்கா 16ம் நூற்றாண்டில் வாழ்ந்த நாகூர் ஆண்டவர் எனும் யோகிக்காக எழுப்பப்பட்டிருக்கிறது. காதிர் அலி என்ற பெயரில் இவர் உலகெங்கும் அறியப்பட்டுள்ளார்.



Click it and Unblock the Notifications