ஹிமாச்சல பிரதேச மாநிலத்தின் நஹன் பகுதியில் அமைந்துள்ள மனம் மயக்கும் சுற்றுலா தலம் ரேணுகா தேவி கோவிலாகும். ரேணுகா தேவிக்காக கட்டப்பட்டுள்ள இந்த கோவில் ரேணுகா ஏரியின் கரையில் உள்ளது.
இந்து மத புராணங்களில், ரேணுகா தேவியானவர் முனிவர் பரசுராமரின் தாயாராக குறிப்பிடப்பட்டுள்ளார். சப்தரிகளில் ஒருவரான இவருடைய தந்தையான ஜமதக்னி முனிவரின் கட்டளையை நிறைவேற்றுவதற்காக ரேணுகா தேவி தன்னுடைய மைந்தன் பரசுராமராலேயே கொல்லப்பட்டார் என்று நம்ப்படுகிறது.
மேலும், துர்கா தேவி கடவுளை மகிமைப்படுத்துவதற்காக இந்த கோவிலை 19-ம் நூற்றாண்டில், கூர்க்காக்கள் ஒரே இரவில் கட்டி முடித்ததாகவும் நம்பப்படுகிறது.
இந்த ரேணுகா தேவியை கௌரவிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் ரேணுகா ஏரிக்கரையில் 'ரேணுகா கண்காட்சி' ஒன்றும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த திருவிழாவில், மத நம்பிக்கைகள் மட்டுமல்லாமல், இசை, வீதி சந்தைகள், கண்காட்சிகள், நடன காட்சிகள் மற்றும் பல கேளிக்கைகள் நடக்கும்.
இதில் பின்பற்றப்படும் சம்பிரதாயப்படி, சகோதரத்துவத்தின் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்லும் விதமாக, மக்கள் தங்களுடைய டர்பன், தொப்பிகள் அல்லது தண்ணீரை தங்களுக்கு பகிர்ந்து கொள்வார்கள்



Click it and Unblock the Notifications