நால்தேஹ்ராவிலிருந்து 58 கி.மீ தூரத்தில் உள்ள தட்டபாணி இப்பகுதியின் முக்கியமான சுற்றுலா அம்சங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 655 மீ உயரத்தில் உள்ள இந்த இடம் கந்தக வெந்நீர் ஊற்றுகளுக்கு பெயர் பெற்றுள்ளது.
இந்த ஊற்றுகளில் குளித்தால் சோர்வு, மூட்டுவலி மற்றும் தோல் நோய்கள் குணமாகும் என்பதாக நம்பிக்கை நிலவுகிறது. சட்லெஜ் ஆற்றின் கரையில் 1 ச.கி.மீ பரப்பில் இந்த ஊற்றுகள் காணப்படுகின்றன.
இந்த இடத்திற்கு விஜயம் செய்யும் பயணிகள் சட்லெஜ் ஆற்றில் படகுச்சவாரியிலும் ஈடுபடலாம். ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதத்தில் ஏராளமான மக்கள் இங்கு விஜயம் செய்கின்றனர்.
ஒரு வித்தியாசமான அம்சமாக இந்த ஊற்றுகள் ஒவ்வொரு வருடமும் ஜுன் அல்லது ஜூலை மாதத்தில் மறைந்துவிட்டு திரும்பவும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் தோன்றுகின்றன.



Click it and Unblock the Notifications