Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » நாமக்கல் » வானிலை

நாமக்கல் வானிலை

மழைக்காலத்திற்குப் பிறகு வரும் அக்டோபர் முதல் மார்ச் மாதங்களில் நாமக்கல் நகரத்திற்கு சுற்றுலா வருவது மிகவும் சிறந்த அனுபவமாக இருக்கும். இந்த நாட்களில் அதிகபட்சமாக  28 டிகிரி செல்சியஸ்  வரை வெப்பநிலை பதிவாகும்.

கோடைகாலம்

நாமக்கல் மித வெப்பம் மற்றும் வறட்சியான சூழலையுடைய நகரமாகும். ஏப்ரல் முதல் ஜீலை மாதங்களில் நிலவும் கோடைக்காலத்தில் நாமக்கல் மிகவும் அதிகமான வெப்பநிலையையும் மற்றும் வெளியில் சுற்றிப் பார்க்க ஒவ்வாத சூழலையும் கொண்டதாக இருக்கும். இந்த கடுமையான கோடைகாலத்தில் நாமக்கல் நகரத்திற்கு வருவதை தவிர்ப்பது நன்று.

மழைக்காலம்

ஆகஸ்டு, செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்கள் நாமக்கல்லில் நிலவும் மழைக்காலமாகும். மழைக்காலத்தில் இந்தப் பகுதி நல்ல மழையைப் பெறும்.

குளிர்காலம்

நாமக்கல்லில் நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் நிலவும் குளிர்காலம் மிகவும் குளிராகவும், கடுமையானதாகவும் இருக்கும். எனினும் பருவநிலை மிகவும் குளிர்ச்சியாகவும் மற்றும் மகிழ்ச்சியை தரவல்லதாகவும் இருக்கும். குளிர்காலத்தில நாமக்கல் நகரின் வெப்பநிலை 18 டிகிரி முதல் 28 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும். இந்த நாட்களில் சுற்றிப் பார்க்க நாமக்கல் நகருக்கு வருவது மிகவும் நல்ல அனுபவத்தைத் தரும்.