Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள்» நௌகுசியாடல்

நௌகுசியாடல் - அமைதியான காயல்கள்!

10

நௌகுசியாடல் என்ற சிறிய ஏரி கிராமம் உத்தரகண்டிலுள்ள நைனிடால் மாநகராட்சியில், கடல் மட்டத்திலிருந்து  1219 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள ஏரியின் அழகும், பல தீர விளையாட்டுக்களும் ஒரு நிறைவான சுற்றுலா அனுபவத்தை தரும். இந்த இடத்தில் பல வகைகளான பறவைகளையும் பட்டாம்பூச்சிகளையும் காணலாம். மேலும் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இங்குள்ள ஏரியில் படகு சவாரி, நீச்சல் மற்றும் மீன் பிடித்தல் போன்றவற்றிலும் ஈடுபட்டு மகிழலாம். மேலும் மலை மீது பைக் ஓட்டுவதும் இங்கு புகழ் பெற்றதாகும். மலை மீது பைக் ஓட்டிச் செல்வதால், யாரும் கால் பதிக்காத பல இடங்களுக்கு சென்று வரலாம்.

நௌகுசியாடல் ஏரியை ஒன்பது மூளைகள் கொண்ட ஏரி என்றும் அழைப்பர். இந்த ஒன்பது மூளைகளையும் ஒரே நேரத்தில் ஒன்றாக  பார்ப்பவர்கள் நிர்வாணா என்ற மன அமைதியை பெறுவார்கள் என்ற நம்பிக்கை நிலவுவது உண்டு.

இந்த ஏரியின் அடியில் ஊற்று இருப்பதால், ஏரியில் வருடம் முழுவதும் தண்ணீர் இருக்கும். மேலும் இந்த ஏரியில் படகு சவாரியும், ஏரியை சுற்றியுள்ள இடங்களில் பாராகிளைடிங் போன்ற விளையாட்டுக்களிலும் ஈடுபடலாம்.

இந்த இடத்திலிருந்து 4 கி.மீ. தொலைவில் ஏரிகளுக்கு பெயர் போன பீம்தால் என்ற இடம் உள்ளது. இதே போல் இந்த இடத்திலிருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ள சாட்டல் என்ற இடமும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வண்ணம் இருக்கும். இந்த இடத்தில் ஏழு இணைந்த ஏரிகளைக் காணலாம்.

பயணிகள் நௌகுசியாடல் பகுதியை விமானம், ரயில் மற்றும் தரை வழி மார்க்கமாக சுலபமாக வந்தடையலாம். நௌகுசியாடலுக்கு மிக அருகில் இருக்கும் விமான நிலையம் பண்ட்நகர் விமான நிலையம்.

நௌகுசியாடலுக்கு மிக அருகில் இருக்கும் இரயில் நிலையம் கத்கோடம் இரயில் நிலையம் ஆகும். மேலும் நைனிடாலிலிருந்து பேருந்துகள் மூலமாகவும் நௌகுசியாடலுக்கு வரலாம். இந்த ஏரியை காண வரும் சுற்றுலாப் பயணிகள் கோடைக்காலம் மற்றும் பருவக்காலம் முடிவில் வருவதே சிறந்த நேரமாக இருக்கும்.

நௌகுசியாடல் சிறப்பு

நௌகுசியாடல் வானிலை

சிறந்த காலநிலை நௌகுசியாடல்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது நௌகுசியாடல்

  • சாலை வழியாக
    நௌகுசியாடல் வருவதற்கு சீரான பேருந்து வசதிகளும் உள்ளன. நௌகுசியாடலுக்கு மிக அருகில், 26 கி.மீ. தொலைவில் உள்ள நைனிடால் மற்றும் அருகில் உள்ள மற்ற ஊர்களில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன. டெல்லியிலிருந்து நௌகுசியாடலுக்கு தனியார் மற்றும் அரசு பேருந்துகள் சீரான இடைவெளியில் இயக்கப்படுகின்றன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    நௌகுசியாடலுக்கு மிக அருகில் 25 கி.மீ. தொலைவில் கத்கோடம் இரயில் நிலையம் அமைந்திருக்கிறது. இந்த இரயில் நிலையத்திலிருந்து டெல்லி மற்றும் நாட்டிலுள்ள முக்கிய நகரங்களுக்கு இரயில் சேவைகள் உள்ளன. இரயில் நிலையத்திலிருந்து நௌகுசியாடலுக்கு ப்ரீ-பேட் டாக்சிகள் மூலமாக வரலாம்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    நௌகுசியாடலுக்கு மிக அருகில் இருக்கும் விமான நிலையம் பண்ட்நகர் விமான நிலையம். இது நௌகுசியாடலிலிருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ளது. விமான நிலையத்திலிருந்து நௌகுசியாடலுக்கு டாக்சிகள் மூலமாக 2 மணி நேரத்தில் வந்து சேரலாம்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
31 Mar,Tue
Check Out
01 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed