Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » நவாதா » வானிலை

நவாதா வானிலை

நவாதாவில் கோடைக்காலத்தில் உஷ்ணம் அதிகமாகவும், குளிர்காலத்தில் குளிர் அதிகமாகவும் காணப்படுகிறது. மழைக்காலத்தில் கடும் மழைப்பொழிவும் இருக்கும். செப்டம்பர் வரை மார்ச் வரையிலான மாதங்கள் இங்கு சுற்றுலா மேற்கொள்வதற்கு ஏற்றவையாக உள்ளன. இருப்பினும், கக்கோலட் மலையை பார்த்து ரசிக்க விரும்பும் பயணிகள் கோடைக்காலத்தில் இங்கு பயணம் மேற்கொள்கின்றனர்.

கோடைகாலம்

கோடைக்காலத்தில் நவாதா பிரதேசத்தில் அதிக உஷ்ணமும் அதிக ஈரப்பதமும் நிலவுகிறது. இக்காலத்தில் அதிகபட்சமாக 45°C  வரை வெப்பநிலை செல்லக்கூடும். எனவே சுற்றுலாவுக்கு இந்த கோடைக்காலம் சிறிதும் உகந்ததல்ல.

மழைக்காலம்

மழைக்காலத்தில் நவாதா பகுதி கடுமையான மழைப்பொழிவை பெறுகிறது. வெள்ளப்பெருக்கும் அதிகம் இருக்கக்கூடும் என்பதால் மழைக்காலம் சுற்றுலாப்பயணத்துக்கு ஏற்றதாக இருக்காது. மழை வளம் இருப்பதால் இப்பகுதியில் விவசாயம் நன்கு தழைத்துள்ளது.

குளிர்காலம்

குளிர்காலத்தின்போது நவாதா பகுதியில் நடுங்கவைக்கும் குளுமையான சூழல் நிலவுகிறது. எனவே பயணிகள் பொருத்தமான குளிர் உடைகளுடன் சுற்றுலா மேற்கொள்வது சிறந்தது.