Search
  • Follow NativePlanet
Share
» »சண்டிகரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வண்ணமயமான கார்னிவல் – சுவாரஸ்யமான தகவல்கள் இதோ!

சண்டிகரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வண்ணமயமான கார்னிவல் – சுவாரஸ்யமான தகவல்கள் இதோ!

காண்போரின் மனங்களைக் கொள்ளையடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் சண்டிகரின் வொண்டர் கார்னிவல் இப்போது மீண்டும் வந்துவிட்டது. ஆம்! குடும்பங்கள் மற்றும் குழந்தைகளுக்கான முழு அளவிலான வேடிக்கையான திருவிழாவாக, வரம்பற்ற மகிழ்வு மற்றும் களியாட்டத்துடன் இந்த வொண்டர் கார்னிவல் இப்போது துவங்கியது. சண்டிகரில் உள்ள கார்னிவல் மைதானத்தில ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்த கார்னிவல் தொடங்கப்பட்டது. இது செப்டம்பர் 4 வரை தொடர்ந்து நடைபெறும்.

திருவிழா பெரியவர்களுக்கு மட்டுமல்ல, இளைஞர்களுக்கும் வேடிக்கை மற்றும் விளையாட்டுகளை உறுதியளிக்கிறது. மூன்று வார கால நிகழ்வானது, திருவிழா சவாரிகள், சுவையான உணவுகள் மற்றும் நீங்களும் உங்கள் குழந்தைகளும் ஒன்றாக ரசிக்கக்கூடிய பல செயல்பாடுகளில் ஈடுபட உங்களை அனுமதிக்கும்.

chandigarhcarnival-1660884434.jpg

செப்டம்பர் 4 வரை நடைபெறும் இந்த திருவிழா, தினமும் மாலை 5:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை திறந்திருக்கும். செக்டார் 34-A குருத்வாராவிற்கு எதிரே உள்ள கார்னிவல் மைதானத்தில் இந்த கார்னிவல் நடத்தப்படுகிறது, இது சண்டிகர் மட்டுமின்றி மொஹாலி மற்றும் பஞ்ச்குலாவைச் சேர்ந்தவர்களும் அணுகக்கூடிய இடமாகும்.

இங்கு சண்டிகர்வாலாக்கள் மட்டுமின்றி, அருகிலுள்ள நகரங்களில் இருக்கும் மக்களுக்கும் இது ஒரு இனிய செய்தி தான். குருகிராமில் நடைபெற்ற கார்னிவலுக்கு நீங்கள் செல்ல தவறியிருந்தால் சண்டிகரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த சூப்பர் ஃபன் கார்னிவலுக்கு ஒரு வேடிக்கை விசிட் அடித்துவிட்டு வாருங்கள்.

இந்த மகிழ்ச்சியான குடும்ப திருவிழாவானது உங்களை மகிழ்வூட்ட தவறாது. ஏனெனில் உங்கள் குழந்தைகளுக்காக இங்கு பெர்ரிஸ் வீல்ஸ், பைரேட் ஷிப், ரிவால்விங் டவர், கொணர்வி, மூன் கோஸ்டர், ஸ்டிரைக்கிங் கார்கள், டோரா டோரா ரைடு, ஹேமர் ரைடு என அனைத்தும் உள்ளது. அதுமட்டுமில்லாமல் இங்கு பல வகை வகையான உணவுகளையும், பல வண்ண குளிர்பானங்களின் கடைகளும் போடப்பட்டுள்ளன.

அவற்றை ரசித்துக்கொண்டே வார இறுதி நாட்களில் மேடையை ஒளிரச் செய்து மெல்லிசை கலைஞர்களின் இசையையும் கேட்டு மகிழலாம். இவை அனைத்தும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நம்மை சற்று ஆசுவாசப்படுத்தி உற்சாகப்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

மேலும் நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய தகவல்கள் இதோ

நிகழ்வின் பெயர்: தி வொண்டர் கார்னிவல்

தேதி: ஆகஸ்ட் 15, 2022 - செப்டம்பர் 4, 2022

நேரம்: தினமும் மாலை 5:00 மணி முதல் - இரவு 11:00 மணி வரை

இடம்: கார்னிவல் மைதானம், செக்டார் 34-A குருத்வாரா எதிரில், சண்டிகர்

ஆகவே சண்டிகரில் இருக்கும் நீங்கள், இந்த வார இறுதியில் என்ன செய்வது என்று நீங்கள் யோசித்துக் கொண்டிருந்தால் கவலையே வேண்டாம். உங்களின் குட்டி சுட்டிகளுக்கு ஆடை அலங்காரம் செய்து உங்கள் குடும்பத்தினருடனோ, அல்லது நண்பர்களுடனே இந்த கார்னிவலுக்கு சென்று டைம் பாஸ் பண்ணுங்கள்!

More News

    Read more about: chandigarh carnival
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+