Search
  • Follow NativePlanet
Share
» »இனி விமான நிலையங்களில் செக் இன் செய்ய அதிக நேரம் எடுக்காது – வந்துவிட்டது “டிஜியாத்ரா”!

இனி விமான நிலையங்களில் செக் இன் செய்ய அதிக நேரம் எடுக்காது – வந்துவிட்டது “டிஜியாத்ரா”!

பயணிகளின் பயண அனுபவத்தை மேம்படுத்தும் முயற்சியாக டெல்லி சர்வதேச விமான நிலைய லிமிடெட் (DigiYatra app) டிஜியாத்ரா செயலியின் அதே பெயரில் புதிய டிஜியாத்ரா செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
75வது சுதந்திர தினத்தையொட்டி, DIAL அறிமுகப்படுத்திய பீட்டா பதிப்பு செயலி, இ-கேட் போர்டிங் சிஸ்டத்தின் உதவியுடன் உள்நாட்டு விமானப் பயணிகளுக்கு இரண்டு இடங்களிலிருந்து பறக்க உதவுகிறது. எனவே, காகித வேலை நேரத்தை இது பெருமளவு குறைக்கிறது.

டிஜி யாத்ரா செயலி விமான நிலையத்தில் உள்ள பல்வேறு சோதனைச் சாவடிகளில் பயணிகளை காகிதமற்ற மற்றும் தொடர்பு இல்லாத நுழைவை அனுமதிக்கும். போர்டிங் பாஸுடன் இணைக்கப்பட்ட நபரின் அடையாளத்தைச் சரிபார்க்க, இந்த செயலி முக அம்சங்களைப் பயன்படுத்துவதால், தொடர்பு இல்லாத மற்றும் காகிதமற்ற நுழைவு, குறைந்த மனித ஈடுபாடு, குறைவான காத்திருப்பு நேரம், சரியான பயணிகளை மட்டும் உள்ளே அனுப்புவது, விமான நிலைய ஆபரேட்டருக்கு பயணிகளின் எண்ணிக்கை குறித்த தரவுகளை அனுப்புவது போன்ற பல நன்மைகளை வழங்குகிறது

allaboutdigiyatraapp-1661020321.jpg -Properties

மேலும், பயணிகள் ஒவ்வொரு சோதனைச் சாவடியிலும் ஐடி அல்லது போர்டிங் பாஸ் தேவையில்லை, அதேபோல் பயணிகளைப் பற்றி சேகரிக்கப்பட்ட தரவு அவர்கள் பயணம் செய்த 24 மணி நேரத்திற்குப் பிறகு தானாகவே நீக்கி விடுகிறது.

ஒரு அரசாங்க அறிக்கையில், டெல்லி விமான நிலையத்தின் டெர்மினல் 3 இல் தேவையான வசதியை DIAL நிறுவியுள்ளது மற்றும் ஏற்கனவே அதன் டிஜியாத்ரா சோதனைகளை நடத்தி பார்த்துள்ளது. சோதனைகளின் போது வசதியைப் பயன்படுத்திய பின்னர் கிட்டத்தட்ட 20,000 பயணிகள் தடையற்ற மற்றும் பாதுகாப்பான பயண அனுபவத்தைப் பெற்றனர், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த செயலியின் முதல் கட்டம் பெங்களூரு மற்றும் வாரணாசியில் இந்த மாதம் செயல்படுத்தப்படும். பின்னர் விஜயவாடா, புனே, டெல்லி, கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும். இந்த செயலி, அதன் பீட்டா பதிப்பில், தற்போது ஆண்ட்ராய்டு போன்களைப் பயன்படுத்தும் பயணிகளுக்குக் கிடைக்கிறது, ஆனால் விரைவில் iOS இயங்குதளங்களிலும் வெளியிடப்படும்.
இந்த செயலி மூலம் பயணிகள் தங்களின் ஒட்டுமொத்த பயோமெட்ரிக் விவரங்களை விரைவில் சமர்பிக்க முடியும். இதனால் பயணிகளுக்கு அதிக நேரம் மிச்சமாகும்.

இனி விமான நிலையங்களில் அதிக நேரம் வரிசையில் காத்திருந்து இந்த வேலைகளை செய்ய வேண்டிய\ அவசியம் இருக்காது!

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+