Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவின் பிரமாண்ட திருமணம் – திருமணத்திற்கு முந்தைய விழாவுக்கே ரூ.1000 கோடி, ஹாலிவுட், பாலிவுட் நட்சத்திரங்

இந்தியாவின் பிரமாண்ட திருமணம் – திருமணத்திற்கு முந்தைய விழாவுக்கே ரூ.1000 கோடி, ஹாலிவுட், பாலிவுட் நட்சத்திரங்

உலக அளவில் இந்திய நாட்டில் தான் திருமணத்திற்கு என பிரமாண்ட செலவுகள் நடைபெறுவதாக அறிக்கை கூறுகிறது. சாமானிய மக்களே விமர்சியாக திருமணம் செய்யும் போது, இந்தியாவின் கோடீஸ்வரர்கள் சும்மா இருப்பார்களா? இந்தியாவில் மிகவும் செலவு செய்து நடத்தப்பட்ட திருமணம் இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானியின் திருமணம் தான். இதற்காக அவர் செய்த செலவு ரூ.713 கோடி ரூபாய்!

இப்போது அந்த திருமணத்தையும் தூக்கி சாப்பிடும் அளவிற்கு அவரது இளைய மகன் ஆனந்த் அம்பானியின் நடைபெற்று வருகிறது. திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டத்திற்கே ரூ.1000 கோடிக்கும் மேல் செலவு, ரிஹானா, பியான்ஸ் போன்ற உலக நட்சத்திரங்கள் தொடங்கி சச்சின், தோனி உள்ளிட்டவர் வரை அங்கு இல்லாத பிரபலம் யாரும் இல்லை என்று தான் கூற வேண்டும்! அப்போ ஜூலையில் திருமணம் எப்படி நடைபெறும் என்று யோசித்து பாருங்களேன்!

இந்தியாவின் மிக பிரமாண்ட திருமணம் இது தான்

ஆசியாவிலேயே மிகப்பெரிய மற்றும் இந்தியாவின் நம்பர் 1 கோடீஸ்வரரான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் மற்றும் என்கோர் ஹெல்த்கேர் சிஇஓ வீரேன் மெர்ச்சன்ட்டின் மகளான வருங்கால மனைவி ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோர் திருமணத்திற்கு முந்தைய வைபவம் கோலாகலமாக குஜராத்தின் ஜாம்நகரில் தொடங்கியது. அனந்த் அம்பானியின் மூன்று நாள் திருமணத்திற்கு முந்தைய விழாக்களில் பங்கேற்க உலக சிஇஓக்கள், மாநிலத் தலைவர்கள், பாலிவுட் மற்றும் விளையாட்டு நட்சத்திரங்கள், பாடகர்கள், பாப் கலைஞர்கள் மற்றும் தொழில்துறை தலைவர்கள் வரத் தொடங்கியதால், அனைத்து விமானங்களும் கடலோர நகரமான ஜாம்நகருக்குச் செல்கின்றன.

anantambaniprewedding

ஹாலிவுட் பிரபலங்களின் நிகழ்ச்சிகள்

சுமார் 2,000 பேர் கொண்ட விருந்தினர் பட்டியலில் வியாழன் அன்று வந்திருந்த பூட்டானின் மன்னர் ஜிக்மே கேசர் நம்கெல் வாங்சுக் மற்றும் மனைவி ஜெட்சன் பெமா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். ஏர்பஸ்ஸில் வந்து இறங்கிய பாப்ஸ்டார் ரிஹானா நடத்திய நிகழ்ச்சி அனைவரின் மனதையும் கொள்ளயடித்தது. இந்நிகழ்வில் கத்தார் பிரதமர் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிம் அல்தானி, கனடாவின் முன்னாள் பிரதமர் ஸ்டீபன் ஹார்பர், முன்னாள் ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூட், முன்னாள் ஸ்வீடன் பிரதமர் கார்ல் பில்ட், முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகளும் ஆலோசகருமான இவாங்கா டிரம்ப், ஹில்டன் மற்றும் ஹைலேண்ட் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தற்காலிக சர்வதேச விமான நிலையமாக மாறிய ஜாம்நகர்

ரிலையன்ஸ் வளாகத்தில் நடந்த ஒரு நிகழ்வின் காரணமாக ஒரு சிறப்பு கோரிக்கையைத் தொடர்ந்து பிப்ரவரி 26 முதல் மார்ச் 6 வரை சர்வதேச விமானங்களைக் கையாள ஜாம்நகர் விமான நிலையம் அனுமதிக்கப்பட்டுள்ளது. அதன்படி மார்ச் 6 வரை, ஜாம்நகர் விமான நிலையம் கிட்டத்தட்ட 300 கிமீ தொலைவில் உள்ள அகமதாபாத் விமான நிலையமாக இருப்பதால், ஏர்பஸ்கள் மற்றும் போயிங்ஸ் உள்ளிட்ட சுமார் 150 திட்டமிடப்படாத விமானங்களைக் கையாளும் "சர்வதேச முனையமாக" மாறியுள்ளது.

anantambaniprewedding

இசை, நடனம், திருவிழா, காட்சி

திருமணத்திற்கு முந்தைய விழாக்களில் இசை, நடனம், திருவிழா, காட்சி கலை, சிறப்பு ஆச்சரிய நிகழ்ச்சி மற்றும் ஜாம்நகரில் கடந்த சில தசாப்தங்களாக ஏற்பாடு செய்யப்பட்ட இயற்கை பாதுகாப்பு அனுபவம், விலங்குகள் மீட்பு மற்றும் மறுவாழ்வுப் பணிகளின் அனுபவம் ஆகியவை அடங்கும். ஜாம்நகர் டவுன்ஷிப் கோயில் வளாகத்தில் ஆனந்த் தலைமையில் மற்றும் பாரம்பரிய ஹஸ்தாக்ஷர் (கையொப்பமிடும்) விழா நடைபெறும் என்று கூறப்படுகிறது. பிரமாண்ட உணவு உபசரிப்புகள், பரிசுப் பொருட்கள், வரவேற்பு ஆகியவை விருந்தினரை அசத்தி வருவதாக அறிக்கைகள் வெளிவருகின்றன.

1000 கோடி செலவில் திருமணத்திற்கு முந்தைய விழா

முகேஷ் அம்பானியும் அவரது மனைவி நீதா அம்பானியும் மார்ச் 1 முதல் 3 வரை ஜாம்நகரில் உள்ள மோதி காவ்டி கிராமத்தில் உள்ள RIL டவுன்ஷிப்பில் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களாக ஒரு தொடர் நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளனர். திருமணம் ஜூன்-ஜூலையில் ஏற்பாடு செய்யப்படலாம் என்று ஒரு வட்டாரம் தெரிவித்துள்ளது. இந்த திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டமே ரூ.1000 கோடி செலவில் நடப்பதாக தெரிகிறது.

big billionaires Hollywood and Bollywood actors greatest wedding of India

இந்த திருமண விழாவில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் யார் யார் தெரியுமா

1. மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ்

2. மெட்டா சிஇஓ மார்க் ஜுக்கர்பெர்க்

3. ஆல்பாபெட் சிஇஓ சுந்தர் பிச்சை

4. சவுதி அராம்கோ தலைவர் யாசிர் அல் ருமையன்

5. அபுதாபி நேஷனல் ஆயில் கம்பெனி சிஇஓ

6. வால்ட் டிஸ்னி சிஇஓ பாப் இகர்

7. பிளாக்ராக் தலைவர் மற்றும் சிஇஓ லாரி ஃபிங்க்

8. அமெரிக்க விஞ்ஞானி டாக்டர் ரிச்சர்ட் கிளாஸ்னர்

9. கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மற்றும் எம்.எஸ்.தோனி

10. அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி

11. ஆதித்ய பிர்லா குழுமத்தின் குமார் மங்கலம் பிர்லா

12. கோத்ரெஜ் குடும்பம்

13. நடிகர்கள் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் பச்சன், ரஜினிகாந்த், ஷாருக்கான், அமீர்கான், சல்மான் கான், அக்‌ஷய் குமார், அஜய் தேவ்கன், கஜோல், ரன்வீர் சிங், தீபிகா படுகோன், ரன்பீர் கபூர், ஆலியா பட், கத்ரீனா கைஃப், மாதுரி தீட்சித் மற்றும் அனில் கபூர் உள்ளிட்டோரும் இதில் அடங்குவர்.

இவர்களை தவிர பிரபல பாடகர்கள், நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள், தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் ஆகியோரும் இந்த திருமண விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+