Search
  • Follow NativePlanet
Share
» » புதுச்சேரி வரை நீட்டிக்கப்பட்டுள்ள சர்க்கார் எக்ஸ்பிரஸ் – சென்னை to புதுச்சேரி புதிய ரயில் சேவை!

புதுச்சேரி வரை நீட்டிக்கப்பட்டுள்ள சர்க்கார் எக்ஸ்பிரஸ் – சென்னை to புதுச்சேரி புதிய ரயில் சேவை!

சென்னைக்கு மிக அருகில் பார்ட்டி, பப், கடற்கரை, ஷாப்பிங், வித விதமான உணவுகள் என ஒரு அற்புதமான சுற்றுலாவை அனுபவிக்க சென்னை வாசிகளும், ஹைதராபாத் மற்றும் பெங்களூர் போன்ற நகரங்களிலிருந்தும் பெருவாரியான இளைஞர் கூட்டமும், குடும்பங்களும் புதுச்சேரிக்கு வருகை தருகின்றனர். புதுச்சேரிக்கு ECR மற்றும் GST ரோடு வழியாக பயணிப்பதோடு, ரயிலிலும் நீங்கள் பயணம் செய்யலாம். சென்னையிலிருந்து புதுச்சேரி வழக்கமான ரயில்கள் இயக்கப்படுகின்றன. இப்போது இந்த லிஸ்டில் சர்க்கார் எக்ஸ்பிரஸும் சேர்கிறது என்பது சந்தோஷமான செய்தி தானே!

puducherrycover

தினமும் ஆயிரக்கணக்கில் மக்கள் பயணம்

வார இறுதிகளிலும், நீண்ட விடுமுறை நாட்களிலும் புதுச்சேரி சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழிகிறது. புதுச்சேரி அருகிலுள்ள நகரங்களுடன் நன்கு பேருந்து சேவை மூலம் இணைக்கப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து புதுச்சேரிக்கும், புதுச்சேரியிலிருந்து சென்னைக்கும் தினமும் ஆயிரக்கணக்கான வேலை நிமித்தமாகவும் மக்கள் பயணிக்கின்றனர். சென்னையிலிருந்து புதுவைக்கு நீங்கள் கிழக்கு கடற்கரை சாலை வழியாகவும், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை (எ) GST சாலை வழியாகவும் தினமும் அதிக அளவிலான பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

puducherry - beach

சென்னை to புதுச்சேரி ரயில் சேவை

புதுச்சேரியிலிருந்து சென்னைக்கு தினமும் அதிகாலையில் பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது. அதே ரயில் இரவு புதுச்சேரி வந்தடைகிறது. செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் NDLS PDY மற்றும் BBS PDYS ரயிலும் இயக்கப்படுகிறது. மேலும் பண்டிகை காலங்களில் சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன. பேருந்து கட்டணத்தை விட ரயில் கட்டணம் குறைவு என்பதாலும், அதிகப்படியான பொருட்களை எடுத்துச் செல்ல உதவியாக இருப்பதாலும் ரயிலில் அதிகப்படியான மக்கள் பயணம் செய்கின்றனர்.

puducherry-streets

போதிய போக்குவரத்து வசதியின்றி ஏனாம் மக்கள் தவிப்பு

புதுச்சேரி பிராந்தியத்திற்கு உட்பட்ட ஏனாமிற்கு வேலை நிமித்தம் மற்றும் சுற்றுலாவிற்காக ஏராளமான மக்கள் பயணிக்கின்றனர். ஏனாமில் இருந்து புதுச்சேரிக்கு நேரடியாக பொது போக்குவரத்து வசதி இல்லாமல் இருந்து வருகிறது. சில PRTC பேருந்துகளும், பல தனியார் பேருந்துகளும் இயக்கபடுகின்றன. ஆனால் தனியார் பேருந்துகளின் கட்டணம் கூடுதலாக இருக்கிறது. இதனால் ஏனாம் மக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். ஏனாம் மக்களின் இந்த பிரச்சனையை தீர்க்கக் கோரி நீண்ட நாட்களாக மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.

karaikal-rock beach

புதுச்சேரி அரசின் முயற்சி

இதுதொடர்பாக ஆளுநர், முதல்வர் ஆகியோரிடம் தெரிவித்து, அவர்களது வழிகாட்டுதலோடு புதுச்சேரி MLA க்கள் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் காக்கிநாடாவில் இருந்து செங்கல்பட்டு வரை செல்லும் சர்க்கார் எக்ஸ்பிரஸ் ரயில் புதுச்சேரி வரை நீட்டிக்க வேண்டும் என்று புதுச்சேரி அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இதன் மூலம் பொதுமக்கள் புதுச்சேரியிலிருந்து ஏனாமிற்கு சுலபமாக பயணிக்கலாம்.

boathousemahe1

புதுச்சேரி to ஏனாம் ரயில் சேவை

இதற்கு விரைந்து முடிவெடுத்த ரயில்வே அமைச்சகம், காக்கி நாடாவிலிருந்து செங்கல்பட்டு வரை இயங்கி வந்திருந்த சர்க்கார் எக்ஸ்ப்ரஸ் ரயில் சேவையை புதுச்சேரி வரை நீட்டிக்க ஒப்புதல் அளித்துள்ளது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் புதுச்சேரி சட்டப்பேரவையில் நடைபெற்ற போது ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவின் அறிவிப்புக்கு புதுச்சேரி சபாநாயகர் நன்றி தெரிவித்துள்ளார்.

gandhistatue1

புதுச்சேரியில் உள்ள தனித்துவமான சுற்றுலாத் தலங்கள்

1. ராக் கடற்கரை சூரிய உதயம்

2. மணக்குள விநாயகர் கோவில்

3. அரவிந்தர் ஆசிரமம்

4. பாரடைஸ் பீச்

5. ஆரோவில் க்லோபுக்குள் தியானம்

6. நேரு வீதியில் ஷாப்பிங்

7. கங்கைவராக நதீஸ்வரர் கோவில்

8. புதுச்சேரியின் பல அழகான தேவாலயங்கள்

9. வரலாறு நிறைந்த அரிக்கன்மேடு

10. ஊசுட்டேரி ஏரி

11. பாண்டி மரினாவில் பாராகிளைடிங்

12. பிரபல கபேக்களில் உணவு

13. தாவரவியல் பூங்கா மற்றும் மியூசியம்

14. போதி கடற்கரையில் ஸ்கூபா டைவிங், சர்ஃபிங்

15. பிரமிடு நடராஜர் கோவில்

நீங்கள் புதுச்சேரி செல்லும் போது மேற்கூறப்பட்ட இடங்களுக்கு ஒரு விசிட் அடிக்க மறக்காதீர்கள்!

More News

    Read more about: puducherry
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+