Search
  • Follow NativePlanet
Share
» »பின்லாந்து நாட்டிற்கு விசா பெறுவது இவ்வளவு ஈஸியா?

பின்லாந்து நாட்டிற்கு விசா பெறுவது இவ்வளவு ஈஸியா?

உலகில் மகிழ்ச்சி மிகுந்த நாடாக பல ஆண்டுகளாக தொடர்ந்து முதலிடத்தில் இருக்கும் நாடு பின்லாந்து ஆகும். உலக மகிழ்ச்சி அறிக்கையில் (World Happiness Report) ஒவ்வொரு ஆண்டும் பின்லாந்து முதலிடத்தில் உள்ளது. அதன் அருமையான வாழ்க்கைத்தரமான சூழல், இயற்கை அழகு, சமுதாய நலன், அரசாங்கத்தின் ஆதரவு, மற்றும் குறைந்த குற்றங்கள் ஆகியவை மகிழ்ச்சியின் முக்கிய காரணிகள் ஆகும்.

Airport

பின்லாந்து மகிழ்ச்சியான நாடாக இருப்பதற்கான காரணங்கள்:

* சமூக பாதுகாப்பு - அனைத்து குடிமக்களும் இலவசமான அல்லது குறைந்த செலவில் மருத்துவ வசதிகளைப் பெறலாம்.

* உயர்ந்த கல்வி தரம் - உலகின் சிறந்த கல்வி முறைகளில் ஒன்றை பின்லாந்து கொண்டுள்ளது.

* குறைந்த வேலை அழுத்தம் - வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையின் இடையில் நல்ல சமநிலை உள்ளது.

* பசுமை மற்றும் இயற்கை வளம் - அற்புதமான காடுகள், ஏரிகள் மற்றும் இயற்கை வளம் மக்களின் மனநிலையை உற்சாகமாக வைத்திருக்கிறது.

* குற்றச்சாட்டுகள் குறைவு - உலகின் மிகவும் பாதுகாப்பான நாடுகளில் ஒன்றாக உள்ளது. இங்கு குற்றங்களும் குறைவு.

* அரசியல் நிலைத்தன்மை - அரசாங்கம் மக்களின் நலனை முன்னிலையில் வைத்து செயல்படுகிறது.

Airport

குறைந்த செலவில் விசா வசதி:

பின்லாந்துக்கு விசா பெறுவதற்கான செலவு மற்ற ஐரோப்பிய நாடுகளை விட குறைவாக இருக்கிறது. Schengen Visa மூலம் பின்லாந்துக்கு பயணம் செய்யலாம்.

*விசா செலவு (2024 ம் ஆண்டு நிலவரப்படி):

*பெரியவர்கள் - 80 யூரோ (சுமார் ரூ.7,200)

*12 வயதிற்குட்பட்ட குழந்தைகள் - 40 யூரோ (சுமார் ரூ. 3,600)

*6 வயதிற்கும் குறைந்த குழந்தைகள் - இலவசம்

விசா பெறுவதற்கான முக்கிய ஆவணங்கள்:

*பாஸ்போர்ட் (குறைந்தபட்சம் 6 மாதங்கள் செல்லுபடியானதாக இருக்க வேண்டும்)
*புகைப்படம், பின்லாந்து பயணத்திற்கான காரணம் (டூரிஸ்ட், ஸ்டூடண்ட், அல்லது வணிக தொடர்பு),
*பின்லாந்தில் தங்குவதற்கான ஆதாரம்,
திரும்பி செல்லும் விமான டிக்கெட் முன்பதிவு விவரம்,
வங்கிக்கணக்கு விவரங்கள் (நிதி ஆதாரத்தைக் காட்ட) போன்றவை முக்கிய ஆவணங்களாகும்.

பின்லாந்திற்கு எப்போது செல்வது?

பின்லாந்து சிலிர்ப்பான குளிர் காலம் மற்றும் அழகான கோடை காலம் கொண்ட நாடாகும். ஜூன் - ஆகஸ்ட் மாதங்களில் பசுமை நிறைந்த இயற்கை காட்சிகளை காணலாம். டிசம்பர் - மார்ச் மாதங்களில் வடதுருவ ஒளிகள் (Northern Lights) காணலாம்.

சுற்றுலா செல்ல வேண்டிய சிறந்த 5 இடங்கள்

1. ரோவானியெமி - சாண்டா கிளாஸ் கிராமம்

இது சாண்டா கிளாஸின் சொந்த ஊர் என்பதால் குழந்தைகளும் குடும்பங்களும் அதிகம் செல்லும் இடமாகும்.இங்கு சாண்டா கிளாஸை நேரில் சந்திக்கலாம் மற்றும் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம். வடதுருவ ஒளிகள் (Northern Lights) காணலாம். முழு பனிக்காட்டில் (Arctic Circle) பனி வீரியம் சவாரி (Husky Safari) மற்றும் ரெயின் டீர் சவாரி அனுபவிக்கலாம்.

2. ஹெல்சின்கி

பின்லாந்தின் தலைநகரான ஹெல்சின்கியில் பழமையான கோவில்கள், அருங்காட்சியகங்கள், உலக பாரம்பரிய தளமாக (UNESCO) கருதப்படும் Suomenlinna Fortress கடற்கோட்டை, பாறைகளைக் கொண்டு கட்டப்பட்ட Temppeliaukio Church (Rock Church) பிரபலமான தேவாலயம், மற்றும் Market Square எனப்படும் கடலோர பகுதியில் படகு பயணங்கள் பிரபலாகும்.

3. லேக் டிஸ்ட்ரிக்ட்

நாட்டு மக்களின் சுத்தமான இயற்கை வாழ்க்கையை காணலாம், 1,88,000+ ஏரிகள் கொண்ட பிரம்மாண்டமான பசுமை நிறைந்த இயற்கை அழகுடன் காணப்படும் ஏரிகள். இங்கு படகு சவாரி, மீன்பிடித்தல் மற்றும் நீச்சல் போன்றவை செய்து மகிழ சிறந்து இடமாகும்.

4. லெவி ஸ்கி ரிசார்ட்:

இங்கு பனி ஸ்கையிங் (Skiing), ஸ்னோமொபைல் (Snowmobile) ரைடிங், மற்றும் ஐஸ்கேட்டிங் (Ice Sckating) போன்ற பனி விளையாட்டுகளுக்கு உகந்த இடம். அழகிய ஹாட் ஸ்பா மற்றும் ரிசார்ட்கள், வடதுருவ ஒளிகளை (Aurora Borealis), Husky Safari மற்றும் Reindeer Safari உடைய சிறந்த சுற்றுலா தலமாகும்.

5. துர்கு:

இது பின்லாந்தின் மிகப் பழமையான நகரம், இங்கு 700 ஆண்டுகள் பழமையான Turku Castle என்னும் பிரபலமான கோட்டை உள்ளது. மேலும் நகரத்தின் வழியாக ஓடும் Aura அழகான ஆறு மற்றும் கலை, வரலாற்று அருங்காட்சியகங்கள் ஆகியவற்றை காணலாம்.

More News

    Read more about: visa world trip world tour
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+