Search
  • Follow NativePlanet
Share
» »புதுச்சேரி மக்களுக்கு குட் நியூஸ் – புதுவையில் இருந்து குமுளிக்கு மிக குறைந்த கட்டணத்தில் பயணிக்கலாம்!

புதுச்சேரி மக்களுக்கு குட் நியூஸ் – புதுவையில் இருந்து குமுளிக்கு மிக குறைந்த கட்டணத்தில் பயணிக்கலாம்!

புதுவை மக்களின் நலனுக்காக புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகம் (PRTC) சார்பில் புதுவையில் இருந்து கம்பம், குமுளி, தேனிக்கு புதிய செமி டீலக்ஸ் பேருந்து சேவை துவங்கப்பட்டுள்ளது. இந்த பாதையில் அரசு பேருந்து சேவைகள் எதுவும் இல்லாத காரணத்தினால், புதுவை மக்கள் தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் கொடுத்து பயணித்து வந்த நிலையில், PRTC புதிய சேவைகளை இயக்குவது பயணிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது, அதுவும் மிக குறைந்த கட்டணத்தில்!

பயணிகள் நலனுக்காக PRTCயின் புதிய பேருந்து சேவை

புதுச்சேரியில் இருந்து கம்பம், தேனி, குமுளி உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் அரசு பேருந்து சேவை எதுவும் இதுவரை இயக்கப்படவில்லை. அதனால் சபரிமலை செல்லும் பக்தர்களும், தேக்கடி, குமுளி, மூணார், உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளும் தனியார் பேருந்துகளில் இதுவரை பயணம் செய்து வந்தனர். புதுவையில் இருந்து குமுளிக்கு AC வசதி அல்லாத தனியார் பேருந்துகளில் ரூ.800 முதல் ரூ.1100 கட்டணமாகவும், AC பேருந்துகளில் ரூ.1200 முதல் ரூ.1700 கட்டணமாகவும் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுவை மக்களின் நலனுக்காக PRTC புதுச்சேரி-குமுளி பேருந்து சேவையை துவக்கியுள்ளது.

Good news for Pondicherry people

புதிய வடிவத்தில் PRTC பேருந்து சேவை

PRTCயில் ஏற்கனவே சேவையில் இருந்து வந்த 138 பேருந்துகளில் 22 பேருந்துகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்ட நிலையில், ரூ.17.30 கோடி செலவில் புதிதாக 38 பேருந்துகள் வாங்கப்பட்டன. இதில் 35 பேருந்துகள் புதுவையில் இருந்து சென்னை, காரைக்கால், மாகே, திருப்பதி உள்ளிட்ட இடங்களுக்கும், காரைக்காலில் இருந்து சென்னை, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் புதியதாக 2 பேருந்துகள் புதுச்சேரி-குமுளி இடையே மே 1 ஆம் தேதி முதல் வெற்றிகரமாக இயக்கப்பட்டு வருகிறது.

தினமும் இயக்கப்படும் பேருந்து சேவை

புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகம் இரு மார்க்கத்தில் அதாவது புதுச்சேரியில் இருந்து குமுளிக்கும், குமுளியில் இருந்து புதுச்சேரிக்கும் தினமும் பேருந்து இயக்க முடிவு செய்து மே 1ஆம் தேதியில் இருந்து பேருந்து சேவையை இயக்கியுள்ளது. இந்த பேருந்து சேவை புதுவையில் இருந்து சபரிமலை செல்லும் பக்தர்களுக்கும், கொடைக்கானல், மூணார், தேக்கடி, வாகமன் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கும் பெரும் உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செமி டீலக்ஸ் பேருந்து சேவை

புதுவையில் இருந்து தினமும் மாலை 5 மணி அளவில் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4 மணி அளவில் இப்பேருந்து குமுளியை அடையும். அதே போல குமுளியில் இருந்து மாலை 5 மணி அளவில் புறப்படும் பேருந்து அதிகாலை 4 மணி அளவில் புதுச்சேரியை அடையும். இந்த பேருந்து 2+2 இருக்கைகளை கொண்ட செமி டீலக்ஸ் பேருந்து ஆகும்.

டிக்கெட் கட்டணம் எவ்வளவு?

புதுவை-குமுளி - ரூ.450

புதுவை-கம்பம் - ரூ.420

புதுவை-தேனி - ரூ.390

இந்த பேருந்தில் நீங்கள் பயணிக்க புதுவை பேருந்து நிலையத்தில் உள்ள PRTC டிக்கெட் கவுண்டரில் டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம். அல்லது www.prtc.in அல்லது www.busindia.com என்கிற இணையத்தளங்களில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்!

More News

    Read more about: puducherry prtc
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+