• Follow NativePlanet
Share
» »இந்தியாவின் மிக ஆடம்பரமான ரயிலான “மஹாராஜாஸ் எக்ஸ்பிரஸ்” இன் புக்கிங் துவங்குகிறது!

இந்தியாவின் மிக ஆடம்பரமான ரயிலான “மஹாராஜாஸ் எக்ஸ்பிரஸ்” இன் புக்கிங் துவங்குகிறது!

ஒரு ராஜா அல்லது ராணியை போல பயணிக்க விரும்புகிறீர்களா? அதை நடைமுறைப்படுத்தி பார்க்க இப்போது நேரம் வந்துவிட்டது. ஆம்! இந்தியாவின் பிரீமியம் சொகுசு ரயில்களில் மிகவும் முதன்மையான மஹாராஜாஸ் எக்ஸ்பிரஸ் இப்போது மீண்டும் இயங்க தயாராக உள்ளது.

இந்த சொகுசு ரயிலில் பயணிப்பதன் மூலம் அதன் ஆடம்பரத்தையும் செழுமையையும் அனுபவித்துக் கொண்டே, மிக அழகிய சுற்றுலாத் தலங்களையும் நாம் ஆராயலாம். இந்த ரயிலின் சிறப்பம்சங்கள் பற்றியும், எப்படி புக்கிங் செய்வது என்பது பற்றியும் விரிவாகக் காண்போம்!

உங்களை மஹாராஜா போல உணரவைக்கும் ‘மஹாராஜாஸ் எக்ஸ்பிரஸ்’

உங்களை மஹாராஜா போல உணரவைக்கும் ‘மஹாராஜாஸ் எக்ஸ்பிரஸ்’

பயணிகள் 'மகாராஜாக்கள்' போல் உணரும் வகையில் இந்திய ரயில்வே தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.சுமார் 84 விருந்தினர்கள் தூங்கும் வசதியுடன், மகாராஜாஸ் எக்ஸ்பிரஸ் 14 தனி அறைகளுடன் 23 பெட்டிகளைக் கொண்டுள்ளது. இதன் கேபினெட்டுகள் 20 டீலக்ஸ், 18 ஜூனியர் சூட்கள், 4 சூட்கள் மற்றும் ஒரு பிரசிடென்ஷியல் சூட் உட்பட நான்கு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

பயணிகளுக்கு பயணத்தை இன்னும் வசதியாக மாற்றுவதற்காக, அனைத்து கேபின்களிலும் LCD TVகள், DVD பிளேயர்கள், இணைய வசதிகள் மற்றும் உள்நாட்டில் உள்ள திரைப்படங்கள் மற்றும் நேரடி தொலைக்காட்சி ஆகியவை உள்ளன. மயூர் மஹால் மற்றும் ரங் மஹால் என்றழைக்கப்படும் உணவகங்களில் உதட்டை பிசையும் பல்வேறு உணவு வகைகளும் வழங்கப்படுகிறது.

மஹாராஜாஸ் எக்ஸ்ப்ரஸின் பேக்கேஜ்கள்

மஹாராஜாஸ் எக்ஸ்ப்ரஸின் பேக்கேஜ்கள்

இந்த ஆடம்பர சொகுசு ரயிலில் இந்தியன் பனோரமா, தி இந்தியன் ஸ்ப்ளெண்டர் மற்றும் தி ஹெரிடேஜ் ஆஃப் இந்தியா மற்றும் ட்ரெஷர்ஸ் ஆஃப் இந்தியா என நான்கு பேக்கேஜ்கள் உள்ளன. அவற்றில் இந்தியன் பனோரமா, தி இந்தியன் ஸ்ப்ளெண்டர் மற்றும் தி ஹெரிடேஜ் ஆஃப் இந்தியா 6 இரவு 7 பகல் கொண்ட பேக்கேஜ்கள் ஆகும். ட்ரெஷர்ஸ் ஆஃப் இந்தியா மட்டும் 3 இரவு 4 பகல் கொண்ட பேக்கேஜ் ஆகும்.

இந்த சொகுசு ரயில் ஒவ்வொரு பேக்கேஜ்க்கு ஏற்றவாறு டெல்லி, ஆக்ரா, ஜெய்ப்பூர், ரன்தம்பூர், ஃபதேபூர் சிக்ரி, கஜுராஹோ, வாரணாசி, பிகானர், ஜோத்பூர், உதய்பூர், மும்பை ஆகிய இடங்களுக்கு செல்லும். இங்குள்ள பிரபலமான சுற்றுலாத் தலங்களை நீங்கள் கண்டு களிக்கலாம்.

இப்போதே முன்பதிவு செய்யுங்கள்

இங்கிலாந்தில் உள்ள ராயல் ஸ்காட்ஸ்மேன் மற்றும் ஐரோப்பாவில் உள்ள ஓரியண்ட் எக்ஸ்பிரஸ் போன்ற உலகின் புகழ்பெற்ற சொகுசு ரயில்களை விட மகாராஜாஸ் எக்ஸ்பிரஸ் உயர்வாக மதிப்பிடப்பட்டுள்ளது. சுமார் 2 லட்சத்தில் தொடங்கும் இதன் கட்டணம் 19 லட்சம் வரை நீண்டுகொண்டே போகிறது.

நீங்களும் மஹாராஜா போன்ற ஒரு உணர்வில் ஊரைச் சுற்றிபார்க்க ஆசைப்பட்டால் இப்போதே www.the-maharajas.com/pages/bookticket இந்த இணையத்தளத்தை பார்வையிட்டு மேலும் விவரங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்.

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+