Search
  • Follow NativePlanet
Share
» »பயணிகளே கவனம்...ரயில் நேரம் மாறுது...இதை தெரிஞ்சுக்க மறந்துடாதீங்க

பயணிகளே கவனம்...ரயில் நேரம் மாறுது...இதை தெரிஞ்சுக்க மறந்துடாதீங்க

பராமரிப்பு பணிகள் காரணமாக பல ரயில்களின் நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதனால் பயணிகள் இந்த ரயில் நேர மாற்றங்களை தெரிந்த கொண்டு தங்களின் பயணத்தை அமைத்துக் கொள்ளும் படி தெற்கு ரயில்வே கேட்டுக் கொண்டுள்ளது. உள்ளூர் ரயில்கள் மட்டுமின்றி தமிழகம், புதுச்சேரியில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்லும் ரயில்களில் நேரங்களிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி நேரம் மாற்றப்பட்டுள்ள ரயில்களின் விபரம் :

Railway News

நேரம் மாற்றப்பட்டுள்ள ரயில்கள் :

- ரயில் எண். 16112 புதுச்சேரி - திருப்பதி MEMU எக்ஸ்பிரஸ், புதுச்சேரியில் இருந்து 15:00 மணிக்கு 2025 ஏப்ரல் 09 மற்றும் 16 ஆகிய தேதிகளில் புறப்படுவதற்கு பதிலாக, முண்டியம்பாக்கத்தில் இருந்து 15:55 மணிக்கு புறப்படும். இந்த ரயில் புதுச்சேரிக்கும் முண்டியம்பாக்கத்திற்கும் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

- ரயில் எண். 16127 (சென்னை எழும்பூர் - குருவாயூர் எக்ஸ்பிரஸ்)
பழைய நேரம்: 10:20 மணி (2025 ஏப்ரல் 09 & 16 தேதிகளில்)
மறுசீரமைக்கப்பட்ட நேரம்: 11:50 மணி (1 மணி 30 நிமிடம் தாமதம்)
வழியில் 90 நிமிடங்கள் வரை நிறுத்தி வைக்கப்படும்

- ரயில் எண். 12868 (புதுச்சேரி - ஹவுரா அதிவிரைவு எக்ஸ்பிரஸ்)
பழைய நேரம்: 14:15 மணி (2025 ஏப்ரல் 09 & 16 தேதிகளில்)
மறுசீரமைக்கப்பட்ட நேரம்: 15:05 மணி (50 நிமிடங்கள் தாமதம்)
வழியில் 10 நிமிடங்கள் வரை நிறுத்தி வைக்கப்படும்

- ரயில் எண். 22676 (திருச்சிராப்பள்ளி - சென்னை எழும்பூர் சோழன் அதிவிரைவு எக்ஸ்பிரஸ்)
பழைய நேரம் : 11:00 மணி (2025 ஏப்ரல் 09 & 16 தேதிகளில்)
மறுசீரமைக்கப்பட்ட நேரம் : 12:00 மணி (1 மணி நேரம் தாமதம்)

Railway Platform

ரயில் சேவை புறப்படும் இடத்தில் செய்யட்டுள்ள மாற்றம் :

- ரயில் எண். 66046 (விழுப்புரம் - சென்னை கடற்கரை MEMU பயணிகள்)
பழைய நேரம்: விழுப்புரம் 13:40 மணி (2025 ஏப்ரல் 09 & 16 தேதிகளில்)
புதிய புறப்படும் இடம்: விக்கிரவாண்டி 13:55 மணி
பகுதியாக ரத்து: விழுப்புரம் மற்றும் விக்கிரவாண்டி இடையே

- ரயில் எண். 66019 (விழுப்புரம் - மயிலாடுதுறை MEMU)
பழைய நேரம்: விழுப்புரம் 14:35 மணி (2025 ஏப்ரல் 09 & 16 தேதிகளில்)
புதிய புறப்படும் இடம்: செடானூர் 14:48 மணி
பகுதியாக ரத்து: விழுப்புரம் மற்றும் செடானூர் இடையே

- ரயில் எண். 16112 (புதுச்சேரி - திருப்பதி MEMU எக்ஸ்பிரஸ்)
பழைய நேரம்: புதுச்சேரி 15:00 மணி (2025 ஏப்ரல் 09 & 16 தேதிகளில்)
புதிய புறப்படும் இடம்: முண்டியம்பாக்கம் 15:55 மணி
பகுதியாக ரத்து: புதுச்சேரி மற்றும் முண்டியம்பாக்கம் இடையே

- ரயில் எண். 12512 (திருவனந்தபுரம் வடக்கு - கோரக்பூர் ராப்திசாகர் எக்ஸ்பிரஸ்)
பழைய நேரம்: 06:35 மணி (02.04.2025 அன்று - ஏப்ரல் 03)
மறுசீரமைக்கப்பட்ட நேரம்: 13:00 மணி (6 மணி 25 நிமிடங்கள் தாமதம்)
காரணம்: இணை ரயில் தாமதமாக வருதல்.

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+