பாகுர் நகரத்தில் உள்ள பூங்காக்களில் மிக அழகான பூங்காவாக இந்த சித்து கன்ஹா பார்க் பிரசித்தி பெற்றுள்ளது. இந்த பூங்கா வளாகத்தின் உள்ளே ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட மார்டெல்லோ டவர் எனும் கோபுர அமைப்பு காணப்படுகிறது.
இது சந்தால் இன போராட்டக்காரர்களை சமாளிப்பதற்காக ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. சந்தால் இன போராட்டக்காரர்கள் ஆங்கிலேயர்களை இந்திய மண்ணிலிருந்து விரட்டுவதற்காக வெகு தீவிரமாக போராடி வந்தனர் எனும் வரலாற்றுத்தகவலும் இங்கு நினைவுகூரத்தக்கது.
நகர டெபுடி கமிஷனர் அலுவலகத்திற்கு எதிரே அமைந்திருக்கும் இந்த பூங்கா வளாகம் சுற்றுலாப்பயணிகள் அவசியம் விஜயம் செய்ய வேண்டிய ஒன்றாகும்.



Click it and Unblock the Notifications