பாலி நகரத்துக்கு அருகில் ஜோத்பூர் விமான நிலையம் உள்ளது. இது பாலி நகரத்திலிருந்து 80 கி.மீ தூரத்தில் உள்ளது. இந்தியாவின் முக்கிய நகரங்கள் மற்றும் உதய்பூர், மும்பை, டெல்லி மற்றும் ஜெய்பூர் நகரங்களுக்கு இங்கிருந்து தினசரி விமான சேவைகள் உள்ளன. ஜோத்பூர் விமான நிலையத்திலிருந்து பாலி நகரம் வருவதற்கு பேருந்துகள் மற்றும் டாக்சி வசதிகளும் நிறைய உள்ளன.