பாலி நகரத்தின் மையப்பகுதியில் இந்த புகழ்பெற்ற லக்கோட்டியா கார்டன் உள்ளது. இந்த ரம்மியமான பூங்காத்தோட்டத்தை சுற்றி லக்கோட்டியா எனும் நகரக்குளம் அமைந்துள்ளது. இந்தப் பூங்காத்தோட்டத்தின் மையத்தில் ஒரு அழகிய சிவன் கோயிலும் காணப்படுகிறது.
பாலி நகரத்தின் பிரதான மார்க்கெட் பகுதியில் இந்த சோம்நாத் கோயில் அமைந்துள்ளது. இந்தக்கோயிலின் வரலாற்றுப்பின்னணியும், சிற்ப வேலைப்பாடுகளும் இதனை ஒரு புகழ்பெற்ற கோயிலாக அறிய வைத்துள்ளன.
இதன் கோபுர விமான அமைப்பில் நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகள்...
பாலி நகரத்தின் பழைய பேருந்து நிலையத்துக்கருகில் இந்த பங்கூர் மியூசியம் என்னும் முக்கியமான சுற்றுலா அம்சம் அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் பல அரிய வரலாற்றுப்பொருட்கள் மற்றும் கலைப்பொருட்கள், ஆடைகள், நாணயங்கள் இவற்றுடன் ராஜ உடைகள் போன்றவையும் காட்சிக்கு...
24வது ஜைன தீர்த்தங்கரரான மஹாவீரருக்கு இந்த ஹடுண்டி ராதா மஹாபிர் கோயில் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. எகிப்திய பிரமிடுகளை ஒத்த கட்டமைப்புடன் வெண்ணிற மற்றும் இளஞ்சிவப்பு நிறத்தில் இந்த கோயில் காட்சியளிக்கிறது.
கோயிலில் ஏறுவதற்கான படிகள் இருபுறமும்...
சௌமுகா கோயில் என்றும் அறியப்படுகிற இந்த ஆதீஷ்வர் கோயில் 15ம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது. மிக உன்னதமான கட்டிடக்கலை அம்சத்தைக் கொண்டுள்ளதாக இது பிரசித்தி பெற்றுள்ளது.
சொர்க்க விமானம் எனப்படும் ‘நளினகுல்ம விமான’த்தைப் போன்று இந்தக் கோயில்...
15ம் நூற்றாண்டில் இந்த சூரிய நாராயணா கோயில் கட்டப்பட்டுள்ளது. உன்னதமான கட்டிடக்கலை அம்சங்கள் நிரம்பியுள்ள இக்கோயில் ஏராளமான பயணிகளை ஈர்த்துவருகிறது.
இந்த கோயிலின் உட்புறத்தில் சூரிய பஹவான் காட்சியளிக்கும் புடைப்புச்சிற்ப வேலைப்பாடுகளை அதிகமாக பார்க்கலாம்....
பாலி நகரத்தின் முக்கியமான சுற்றுலா அம்சங்களில் ஒன்று இந்த நிம்போ கா நாத் எனும் ஸ்தலமாகும். இது ஃபல்னா எனுமிடத்திலிருந்து சந்தேரவ் செல்லும் வழியில் அமைந்துள்ளது.
ஹிந்து புராணிக ஐதீகத்தின்படி, மஹாபாரதப் பாண்டவர்கள் வனவாசத்தின்போது இங்கு தங்கியிருந்ததாக...
பாலி மாவட்டத்தில் சுக்ரி ஆற்றின் கரையில் இந்த சோஜட் எனும் நகரம் அமைந்துள்ளது. இந்த நகரம் தம்ரவதி என்ற பெயரில் முற்காலத்தில் அழைக்கப்பட்டுள்ளது. ஒரு கோட்டை மற்றும் சேஜல் மாதா கோயில், சதுர்புஜ் கோயில், சாமுண்டமாதா கோயில் போன்ற கோயில்களுக்கு இந்த ஸ்தலம் பிரசித்தி...