அக்டோபர் முதல் பிப்ரவரி வரையிலான பருவமே பாலி நகரத்துக்கு சுற்றுலா மேற்கொள்ள ஏற்றதாக உள்ளது. இப்பருவத்தில் இப்பகுதியின் வெப்பநிலை மற்றும் சூழல் சுற்றுலாவுக்கு உகந்ததாக காணப்படுகிறது.
(மார்ச் முதல் ஜுன் வரை): பாலி பகுதியில் மார்ச் மாதத்தில் துவங்கி ஜூன் வரை கோடைக்காலம் நீடிக்கிறது. கோடைக்காலத்தில் குறைந்தபட்சம் 35° C முதல் அதிகபட்சமாக 46° C வரை இங்கு வெப்பநிலை நிலவுகிறது. கடுமையான வெப்பம் மற்றும் வறட்சி இப்பருவத்தில் காணப்படுகிறது.
(ஜூன் முதல் செப்டம்பர் வரை): ஜூன் மாதத்தில் துவங்கி செப்டம்பர் மாதம் வரை பாலி பிரதேசத்தில் மழைக்காலம் நீடிக்கிறது. இக்காலத்தில் நல்ல மழையை பாலீ பகுதி பெறுகிறது.
(அக்டோபர் முதல் பிப்ரவரி வரை): டிசம்பர் மாதத்தில் மிகக்குளுமையான சூழலை பாலி பகுதி பெறுகிறது. இக்காலத்தில் சராசரி வெப்பநிலை அதிகபட்சம் 26° C முதல் குறைந்தபட்சம் 5° C வரை நிலவுகிறது.