Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பாங்காங் » ஈர்க்கும் இடங்கள் » பாங்காங் ஏரி

பாங்காங் ஏரி, பாங்காங்

13

பாங்காங் ஏரி எனப்படும் பாங்காங் ட்சோ கடல் மட்டத்திலிருந்து 4350 மீட்டர் உயரத்தில், அமைந்துள்ளது. சுமார் 134 கிலோமீட்டர் நீளமும் 5 கிலோமீட்டர் அகலமும் கொண்டதாக இந்த ஏரி பரவியுள்ளது.

2006 ஆம் ஆண்டில் "த ஃபால்" மற்றும் 2010 ல் "3 இடியட்ஸ்" ஆகிய திரைப்படங்களில், இந்த ஏரியின் அழகுக் காட்சிகள், படமாக்கிக் காட்டப்பட்டுள்ளன. இந்தத் திரைப்படங்களின் வெற்றிக்குப் பிறகே இந்த ஏரிப் பகுதி சர்வதேச சுற்றுலாப்பயணிகளிடையே பிரபலம் ஆக தொடங்கியது.

இப்பகுதிக்கு சுற்றுலா வரும் பயணிகள் அருகாமையிலுள்ள, பசுமைப் பள்ளத்தாக்கு மற்றும் திக்சே கிராமம் ஆகியவற்றைக் கண்டு இன்புறலாம். பறவை ஆர்வலர்கள் இந்த ஏரியை சுற்றிப்பார்த்து, இந்த பகுதியில் வாழும் பறவைகளான பார் தலையுடைய வாத்துக்கள், சைபீரியக் கொக்கு, நீர்க்கோழி, ஆகியவற்றைக் கண்டு ரசித்து நேரத்தை செலவிடலாம். குளிர்காலங்களில் இந்த ஏரியிலுள்ள நீர் முழுதும், உப்பு நீராக இருந்தாலும் கூட, பனிக்கட்டியாக உறைந்துவிடும்.

லே' யிலிருந்து 5 மணி நேர பயண தூரத்தில் இவ்விடம் அமைந்துள்ளது. இந்திய சீன எல்லைக்கோட்டுக்கருகில் அமைந்துள்ளதால், எல்லைக்கோட்டு அனுமதி(Inner Line Permit) பெற்ற பிறகுதான் இந்த ஏரியை அணுக முடியும் , இந்திய நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு தனிநபர் அனுமதியும், பிறநாட்டினர்களுக்கு குறைந்த பட்சம் மூன்று பேரடங்கிய குழுக்களுக்கான குழு அனுமதியும் வழங்கப்படுகின்றன.

அங்கீகாரம் பெற்ற வழிகாட்டி ஒருவரும் உடன் செல்லவேண்டும்.லேயிலுள்ள சுற்றுலா அலுவலகத்தில் குறைந்த அளவு கட்டணத்திற்கு இவ்வனுமதிகள் வழங்கப்படுகின்றன. பாதுகாப்புக் காரணங்களைக் கருத்தில் கொண்டு பாங்காங் ஏரியில் படகு சவாரி செய்ய அனுமதியில்லை.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue