Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பன்ஹாலா » வானிலை

பன்ஹாலா வானிலை

பன்ஹாலா நகரம் வருடமுழுதுமே பெரும்பாலும் சௌகரியமான பருவநிலை மற்றும் சூழலுடன் காணப்படுகிறது. இருப்பினும் ஜுலை, ஆகஸ்ட் போன்ற அதிக மழை பொழியும் காலங்களை தவிர்ப்பது பயண வசதிக்கு நல்லது.

கோடைகாலம்

மார்ச் மே மாதம் வரை நீடிக்கும் கோடைக்காலத்தில் பன்ஹாலா பகுதி மித வெப்பத்துடன் ஒரு போதும் அதிக உஷ்ணத்தைக் கொண்டிராமல் காணப்படுகிறது. இக்காலத்தில் சராசரியாக வெப்பநிலை 28°C என்ற அளவில் உள்ளது.

மழைக்காலம்

ஜுன் முதல் செப்டம்பர் வரையிலான மாதங்களில் பன்ஹாலா பகுதியில் மழைக்காலம் நிலவுகிறது.  மழைக் காலத்தில் கணிசமான மழைப்பொழிவினை இப்பிரதேசம் பெறுகிறது. இக்காலத்தில் இந்த சுற்றுலாத்தலத்தை சுற்றிப்பார்ப்பது சௌகரியமாக உள்ளது. மழைக்காலத்தில் சராசரியாக வெப்பநிலை 23°C என்ற அளவில் உள்ளது.

குளிர்காலம்

நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை நீடிக்கும் குளிர்காலத்தில் பன்ஹாலாபகுதி இனிமையான விரும்பத்தக்க சூழலுடன் காணப்படுகிறது. இக்காலத்தில் வெப்பநிலை10°C  முதல் 25°C  வரை காணப்படுகிறது.