Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பதான்கோட் » வானிலை

பதான்கோட் வானிலை

பிப்ரவரி மத்தியில் இருந்து ஏப்ரல் மாதம் பாதி வரை இங்கே இளவேனிற் காலம் நிலவும். இக்காலம் இனிமையான வானிலையை பெற்றிருக்கும். இருப்பினும் அக்டோபர் நாற்றும் நவம்பர் மாதங்களில் வானிலை இனிமையாக இருப்பதால் இக்காலத்தில் இங்கு சுற்றுலா வருவதே உகந்தது. மேலும் அனைத்து முக்கியமான திருவிழாக்களும் இக்காலத்திலேயே நடைபெறும். அதனால் இக்காலத்தில் இங்கு சுற்றுலா வந்தால் இதன் பண்பாட்டையும் அறிந்து கொள்ளலாம்.

கோடைகாலம்

(மே முதல் ஜூன் வரை): பதான்கோட்டில் கோடைக்கால பகல் நேரங்களில் கடுமையான வெப்பமும், இரவு நேரங்களில் சற்று குளிராகவும் இருக்கும். தட்ப வெப்பநிலை 35° செல்சியஸ் முதல் 48° செல்சியஸ் வரை நிலவும்.

மழைக்காலம்

(ஜூன் முதல் செப்டம்பர் வரை): கோடைக்காலத்தின் வெப்பத்தையும் தூசிகளையும், மழைகளை கொண்டு மழைக்காலம் மாற்றி அமைக்கும். இக்காலத்தில் மிதமான முதல் கனமான மழை வரை பெய்யக்கூடும். கனமழை பெய்வதால் ஈரப்பதமும் அதிகமாகவே காணப்படும். ஆகஸ்ட் மாதத்தில் மழை அதிகமாக இருக்கும்.

குளிர்காலம்

(நவம்பர் முதல் மார்ச் வரை): குளிர் காலத்தின் போது குறைந்த பட்ச வெப்பநிலை  0° செல்சியசாகவும் அதிகபட்ச வெப்பநிலை 15° செல்சியசாகவும் நிலவும். மேல் காற்று பலமாக வீசுவதால் இடியுடன் கூடிய மழையுடன் ஆலங்கட்டி மழையும் பெய்யக்கூடும். அதனால் வெப்பநிலையும் குறைந்து காணப்படும். இவ்வகை மழை இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மட்டுமே நீடிக்கும்.