குருத்வாரா ஹன்டி சாஹிப், பழைய பாட்னா நகரிலிருந்து மேற்காக சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ள தானாபூரில் அமைந்துள்ளது. பாட்னா சாஹிப்பை விட்டுவெளியேறிய குரு தேக் பஹதூரின் குடும்பத்தினர் இங்கு தான் முதன்முறையாக இடைத்தங்கல் மேற்கொண்டிருக்கின்றனர்.
அவர்களுக்கு மாய் பர்தானி என்ற பெயருடைய ஒரு முதிய பெண்மணி ஒரு கெட்டில் (ஹன்டி) அளவுடைய கிச்சடியை பரிமாறியதைத் தொடர்ந்து கட்டப்பட்ட இந்த வழிபாட்டு மையம், ஹன்டிவாலி சங்கத் என்று பெயரிடப்பட்டதாக ஆன்மீகக் குறிப்புகள் கூறுகின்றன. இக்கோயில் தற்போது குருத்வாரா ஹன்டி சாஹிப் என்ற பெயரில் வழங்கப்பட்டு வருகிறது.



Click it and Unblock the Notifications