பதான் தேவி, பாட்னா

பதான் தேவி மந்திர், பாட்னாவின் மிகப் புனிதமான கோயில்களுள் ஒன்றாகும். துர்கா தேவியின் உறைவிடமாகக் கருதப்படும் பாரி பதான் கோயில், கங்கை நதியை வடக்குப் புறமாகப் பார்த்திருக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது.

இக்கோயிலின் சிலைகள் அனைத்தும் கருங்கல்லால் செதுக்கப்பட்டுள்ளன. ஜாதி வேறுபாடு ஏதும் இன்றி அனைத்து பிரிவுகளைச் சேர்ந்த பக்தர்களும் இக்கோயிலுக்குள் சென்று வர அனுமதிக்கப்படுகின்றனர்.

இங்கு வழிபடுவதற்கு செவ்வாய்க்கிழமைகள் விசேஷமானவையாகக் கருதப்படுகின்றன. சோட்டி பதான் தேவி மந்திர், பாட்னா நகரின் சௌக் பகுதியில் அமைந்துள்ளது.

முன்னர் இக்கோயிலில் குடிகொண்டுள்ள தெய்வமே நகரின் பிரதான உறைவிடக் கடவுளாகக் கருதப்பட்டது; ஆனால் காலப்போக்கில் இதன் முக்கியத்துவம் மங்கி, பாரி பதான் தேவி கோயில் பிரதான இடத்தை பிடித்து விட்டதால், இது இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டு விட்டது.

Please Wait while comments are loading...