பாட்னிடாப்பிற்கு அருகிலுள்ள சுத் மஹாதேவ் என்ற சிவபெருமானுக்கான வழிபாட்டுத்தலம் 2800 ஆண்டுகள் பழமையானதாகும். புராணக்கதைகளின் படி, சிவபெருமானின் துணைவியாரான பார்வதி தேவியார் இங்கிருந்த 'சிவலிங்கத்தை' வணங்கிய படி பக்தியில் மூழ்கியிருந்த போது, சுதீட் என்ற பெயருடைய துர்த்தேவதை ஒன்று சிவபெருமானுக்கு தன்னுடைய நன்றியை தெரிவிப்பதற்காக வந்தது.
இந்த துர்த்தேவதையின் கொடூர தோற்றத்தைக் கண்ட பார்வதி தேவி பயத்தால் அலறி விட்டார். அதுவரை உறக்கத்திலிருந்த சிவபெருமான் பார்வதி தேவியின் அலறலை கேட்டவுடன் எழுந்து விட்டார்.
எழுந்தவுடன், அவர் தன்னுடைய திரிசூலத்தை எடுத்து சுதீட் என்ற அந்த துர்த்தேவதையின் மீது ஏவி விட்டார். உடனடியாக தன்னுடைய தவறை உணர்ந்த சிவபெருமான், அந்த துர்த்தேவதைக்கு திரும்பவும் உயிரை கொடுத்தார்.
எனினும், சுதீட் என்ற அந்த துர்த்தேவதை, தன்னுடைய கடவுளின் கைகளில் விழுந்து மரணடைவதையே தன்னுடைய முக்திப் பாதையாக தேர்ந்தெடுத்துக் கொண்டது. இந்த சம்பவத்திற்குப் பிறகே, இவ்விடத்தில் உள்ள கடவுள் சுத் மஹாதேவ் என்று அழைக்கப்பட்டார். சிவபெருமான் ஏவிய திரிசூலத்தின் பகுதிகள் இன்னமும் இந்த கோவிலில் உள்ளதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பாபா ரூப் நாத் என்பவர் சமாதி அடைந்த இடமாகவும் இந்த கோவில் கருதப்படுகிறது. பாபா ரூப் நாத்தின் 'தூணி' என்ற 'அழியாத அக்னியை' இன்றும் இந்த கோவிலில் எரிந்து கொண்டிருப்பதை நாம் காண முடியும்.
ஜுன் மாதத்தின் முழு பௌர்ணமி நாளான 'ஜெஸ்டா பூர்ணிமா'வின் போது, பெருந்திரளான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வருகை புரிவார்கள். இந்த கோவிலுக்கு அருகிலேயே மற்றுமொரு புகழ் பெற்ற சுற்றுலா தலமான மன்டலாய் ஆசிரமம் உள்ளது.



Click it and Unblock the Notifications